ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய இஸ்ரோ:வெற்றியடைந்த பிஎஸ்எல்வி சி59
By : Sushmitha
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பல சாதனைகளை புரிந்து வருகிறது மேலும் நம் நாட்டின் செயற்கைக்கோள்களை மட்டுமின்றி வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது அந்த வகையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வடிவமைத்த இரு சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது
அதாவது சூரியனின் ஒளிபட்ட பாதியை ஆய்வு செய்வதற்காக புரோபா 3 என்ற பெயரில் 550 கிலோ எடை கொண்ட இரு சிறிய செயற்கைக்கோள்களை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வடிவமைத்தது இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவு தளத்திலிருந்து இஸ்ரோ பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தியது
இந்த ராக்கெட்டிற்கான 2 மணி நேர கவுன்ட்டர் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் தொடங்கியது அழைப்பு நேற்று ராக்கெட் ஏவுதல் பணிகள் முடிவடைந்தது இருப்பினும் மாலை 3:10 மணிக்கு ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாகவும் இன்று மாலை 4:12 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்தது
இதற்குப் பிறகு மாலை 4: 04 மணிக்கு புரோபா 3 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய உள்ளதாக அறிவத்தது அறிவித்தபடியே பிஎஸ்எல்வி சி59 விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது