Kathir News
Begin typing your search above and press return to search.

ஆபரேஷன் சிந்து:மீட்கப்பட்டுள்ள 594 இந்தியர்களை வரவேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

ஆபரேஷன் சிந்து:மீட்கப்பட்டுள்ள 594 இந்தியர்களை வரவேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!
X

SushmithaBy : Sushmitha

  |  24 Jun 2025 9:37 PM IST

இஸ்ரேல்-ஈரான் நாடுகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வரும் சூழலில் அந்த நாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வரும் வகையில் ஆபரேஷன் சிந்து நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது


இதன் ஒரு பகுதியாக இஸ்ரேல் நாட்டிலிருந்து ஜோர்டானுக்கு அழைத்து வரப்பட்ட இந்திய மக்கள் மற்றும் மாணவர்கள் என 165 பேர் இன்று காலை 08:45 மணியளவில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஐஏஎஃப் சி-17 விமானத்தில் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர் தில்லி விமான நிலையம் வந்தடைந்த அவர்களை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர்.எல்.முருகன் உற்சாகத்துடன் வரவேற்றார்

இஸ்ரேல் நாட்டிலிருந்து இதுவரை 594 இந்தியர்கள் ஆபரேஷன் சிந்து நடவடிக்கை மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News