சர்வதேச மகளிர் தின ஸ்பெஷல்லாக 6 பெண் சாதனையாளர்களிடம் தன் சமூக வலைதள கணக்கை ஒப்படைத்த பிரதமர் மோடி!

By : Sushmitha
கடந்த மாத இறுதியில் நடைபெற்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மகளிர் தினத்தை முன்னிட்டு தனது சமூக ஊடக கணக்குகள் மகளிர்வசம் ஒப்படைக்கப்படும் என கூறியிருந்தார் அதன்படியே இன்று மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் சாதனையாளர்களிடம் தனது சமூக வலைதள கணக்கை ஒப்படைத்துள்ளார்
முன்னதாக பிரதம நரேந்திர மோடி தனது சமூக ஊடக கணக்குகளை பெண் சாதனையாளர்களிடம் ஒப்படைப்பது இது முதல் முறை அல்ல 2020 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்றும் பிரதமர் தனது சமூக ஊடக கணக்குகளை ஏழு பெண் சாதனையாளர்களுக்கு வழங்கினார் அதன்படி இந்த முறை ஆறு பெண் சாதனையாளர்களிடம் தனது சமூக வலைதளக் கணக்கை ஒப்படைத்துள்ளார்
தொழில் முனைவோர் அஜைதா ஷா தமிழக செஸ் வீராங்கனை ஆன வைஷாலி விண்வெளி விஞ்ஞானி ஷில்பி சோனி அணு விஞ்ஞானியான எலினா மிஸ்ரா வேளாண் தொழில் முனைவோர் அனிதா தேவி மற்றும் கல்வியாளர் அஞ்சலி அகர்வால் ஆகிய பெண் சாதனையாளர்கள் தான் பிரதமர் மோடியின் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்
