மாலத்தீவின் 60வது ஆண்டு சுதந்திர தின விழா: கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர்!

By : Bharathi Latha
மாலேவுக்கான தற்போதைய பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலத்தீவின் 60வது ஆண்டு சுதந்திர தின விழாவில் 'கௌரவ விருந்தினராக' கலந்து கொண்டார். மாலத்தீவில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்தியப் பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். அதிபர் முய்சுவால் கௌரவிக்கப்பட்ட முதல் வெளிநாட்டுத் தலைவரும் பிரதமர் மோடி ஆவார்.
குடியரசு சதுக்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பை மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்சுவுடன் பிரதமர் நேரில் பார்வையிட்டார். இந்த நிகழ்வில், பிரதமர் மாலத்தீவு மக்களுக்கும் அரசுக்கும் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தக் கொண்டாட்டங்களில் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகள் மற்றும் பிற உள்ளூர் பிரிவுகளின் மிடுக்கான அணிவகுப்பும், நவீன தேசமாக மாலத்தீவின் சாதனைகளை மையமாகக் கொண்ட கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
மாலத்தீவு மக்களின் அன்பான அழைப்பிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். சுதந்திர தின விழாவில் 'கௌரவ விருந்தினராக' அவர் பங்கேற்றது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. 2025-ம் ஆண்டு இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 60 ஆண்டுகளையும் குறிக்கிறது.
