பொதுப் பிரிவிலும் ஏழைகள் இருப்பதை 60 ஆண்டுகளாக சிந்திக்காத காங்கிரஸ்... விளாசிய பிரதமர்!
By : Sushmitha
பிரதமர் நரேந்திர மோடி ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது, மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைய உள்ளதற்கு உங்கள் அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற வந்துள்ளேன் என்று மக்களை நோக்கி தனது பேச்சை தொடங்கினார். இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளது இப்பொழுதே பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர உள்ளது உறுதி ஆகிவிட்டது.
என் மனதை உயர்வாக வைத்திருக்கவும் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கவும் ஹிமாச்சலின் உயரமான மலைகள் எனக்கு கற்றுக் கொடுத்தது. பாரத அன்னையை இழிவுபடுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால் காங்கிரஸ் பாரத அன்னையை அவமதிப்பதை நிறுத்துவதாக இல்லை!
அவர்களின் ஆட்சிக் காலத்தை நீங்களே பார்த்திருப்பீர்கள், ஒரு பலவீனமான அரசாங்கமாக இருந்தது. அதனை பாகிஸ்தானும் பயன்படுத்திக் கொண்டது உலகம் முழுவதும் பலவீனமான காங்கிரஸ் அரசு உதவி கேட்டு அலைந்து திரிந்தது. ஆனால் இனி இந்தியா உலகத்திடம் பிச்சை எடுக்காது, சொந்தமாகவே இந்தியா போராடும்.
கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாக பொது பிரிவிலும் ஏழைகள் இருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் நினைத்துப் பார்க்கவே இல்லை. ஆனால் நான் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை பொது பிரிவில் உள்ள ஏழைகளுக்கு வழங்கினேன். இதன் மூலம் பல துறைகளில் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளது என்று பேசியுள்ளார்.
Source : Dinamalar