Kathir News
Begin typing your search above and press return to search.

உணவு தானிய சேமிப்புத் திறன் அதிகரிக்க ஒரு லட்சம் கோடி - மத்திய மந்திரி சபை ஒப்புதல்!

கூட்டுறவுத்துறையின் உணவு தானிய சேமிப்பு திறனை அதிகரிக்கும் வகையில் ரூபாய் ஒரு லட்சம் கோடி திட்டத்திற்கு மத்திய மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்தது

உணவு தானிய சேமிப்புத் திறன் அதிகரிக்க ஒரு லட்சம் கோடி -  மத்திய மந்திரி சபை ஒப்புதல்!

KarthigaBy : Karthiga

  |  1 Jun 2023 7:30 AM GMT

மத்திய மந்திரி சபை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது . இதன் முக்கியமாக கூட்டுறவுத் துறையின் உணவு தானிய சேமிப்புத்தன்மை அதிகரிக்கும் வகையில் ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கான திட்டத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது .இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 3,100 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி நடைபெறுகிறது . ஆனால் இதில் 43 சதவீதத்தை சேமிக்கும் அளவிற்கு தற்போது வசதிகள் உள்ளன.

குறிப்பாக 1450 லட்சம் டன் உணவு தானியங்களை சேமித்து வைப்பதற்கான வசதிகள் மட்டுமே கூட்டுறவுத் துறையில் உள்ளன . இதை அடுத்து ஐந்து ஆண்டுகளில் 2150 லட்சம் டன் அளவுக்கு உயர்த்தப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் ஒரு லட்சம் கோடியில் திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு கூட்டுறவுத்துறை அனுப்பி உள்ளது. இந்த திட்டத்திற்கு மந்திரி சபையின் நேற்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் மேலும் எழுநூறு லட்சம் டன் உணவு தானியம் சேமிப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும.

இவ்வாறு அதிகமான உணவு தானியங்களை சேமிக்கும் வசதி கிடைப்பதால் உணவு தானியங்கள் சேதமடைவது தவிர்க்கப்படும். மேலும் இறக்குமதி குறைக்கப்படுவதுடன் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இதே போல இந்த வசதிகள் மேம்படுவதால் விவசாயிகளுக்கு உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்லும் செலவினம் குறைவதுடன் உணவு பாதுகாப்பும் வலுப்படுத்தப்படும் .

இதை தவிர ஒருங்கிணைந்த நகர்ப்புற நிர்வாகத்தை மையமாகக் கொண்டு வட்டப் பொருளாதரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கான 'புத்தாக்கம்' ஒருங்கிணைப்பு மற்றும் நிலைத்த நகர முதலீடுகள் திட்டத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இந்த நிதியாண்டு முதல் நான்காண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் இந்த திட்டம் பிரனாஸ் ஐரோப்பிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் . இந்த தகவல்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News