ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்:பழங்குடியினர் நலனுக்காக ரூ.6640 கோடி மதிப்பிலான பல திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
By : Sushmitha
பிரதமர் நரேந்திர மோடி இன்று பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் இருந்து ரூ.6640 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களை பழங்குடியினர் நலனுக்காக தொடங்கி வைத்தார் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ் என கொண்டாடப்படும் விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜமுய் மாவட்டத்திற்கு சென்றிருந்தார்
அங்கு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிர்சா முண்டாவை கௌரவிக்கும் வகையில் நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார் மேலும் பிரதமர் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டத்தின் கீழ் பழங்குடியின குடும்பங்களுக்காக கட்டப்பட்ட 11000 வீடுகளுக்கான கிரிஹ் பிரவேஷ் விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்
பிரதமர் மோடியால் வெளியிடப்பட்ட திட்டங்கள் பழங்குடியின சமூகங்களை மேம்படுத்துவதையும் பிராந்தியத்தின் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாக அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது தொலைதூர பழங்குடிப் பகுதிகளில் சுகாதார அணுகலை மேம்படுத்த பிரதமர் மோடி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் கீழ் 23 நடமாடும் மருத்துவ பிரிவுகளையும் தர்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உட்கர்ஷ் அபியான் கீழ் கூடுதலாக 30 எம்எம்யூகளையும் தொடங்கி வைத்தார்
மேலும் தொழில்முனைவு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 10 ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகள் மற்றும் 300 வான் தன் விகாஸ் கேந்திராக்களையும் பிரதமர் திறந்து வைத்தார் அதுமட்டுமின்றி மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மற்றும் ஜபல்பூரில் இரண்டு பழங்குடியின சுதந்திரப் போராளிகள் அருங்காட்சியகங்களையும் பழங்குடி சமூகங்களின் வரலாற்றை ஆவணப்படுத்தவும் பாதுகாக்கவும் ஸ்ரீநகர் மற்றும் காங்டாக்கில் இரண்டு பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்களையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
அதோடு 500 கிமீ புதிய சாலைகள் மற்றும் பழங்குடியினப் பகுதிகளுக்கு சமூக மையமாக செயல்படும் நோக்கத்தில் 100 பல்நோக்கு மையங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பிரதமர் மோடி பிரதமர்-ஜன்மனின் கீழ் 25000 வீடுகளும் தர்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உட்கர்ஷ் அபியான் கீழ் 1.16 லட்சம் வீடுகளும் பழங்குடியின மாணவர்களுக்கான 370 விடுதிகளும் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.