Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரின் அனுசுசித் ஜாதி அபியுதய் திட்டத்தின் கீழ் விடுதி வசதிகள் 69,795 பயனாளிகளுக்கு விடுதி வசதிகள் உருவாக்கம்!

பிரதமரின் அனுசுசித் ஜாதி அபியுதய் திட்டத்தின் கீழ் விடுதி வசதிகள் 69,795 பயனாளிகளுக்கு விடுதி வசதிகள் உருவாக்கம்!
X

SushmithaBy : Sushmitha

  |  11 Feb 2025 9:45 PM IST

பிரதமரின் அனுசுசித் ஜாதி அபியுதய் திட்டமானது கடந்த 2021-22 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது ஆதர்ஷ் கிராமம் ஷெட்யூல்டு வகுப்பினரின் பொருளாதார மேம்பாட்டிற்கான மாநில மாவட்ட அளவில் மானியம் தங்கும் விடுதிகள் என மூன்று கட்டங்களாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

பட்டியலின வகுப்பினர் அதிகம் உள்ள கிராமங்களில் போதுமான உள்கட்டமைப்பு மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சி குறியீடுகளை மேம்படுத்துதலை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது

மேலும் திறன் மேம்பாடு வருமானம் ஈட்டும் திட்டம் மற்றும் பிற முயற்சிகள் மூலம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கி பட்டியலின வகுப்பினரின் வறுமையை குறைத்தல் கல்வியறிவை அதிகரிக்க பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் பட்டியலின வகுப்பு மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை ஊக்குவித்தல் உள்ளிட்டவை இந்தத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன

பிரதமரின் அனுசுசித் ஜாதி அபியுதய் திட்டத்தின் கீழ் விடுதிகள் கட்டுவதன் மூலம் அந்தப் பிரிவு மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும் நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு குடியிருப்பு வசதிகளை வழங்குவதற்கு இத்தகைய விடுதிகள் உதவும்

இதுவரை 867 விடுதிகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், 69,795 பயனாளிகள் விடுதி வசதிகளைப் பெற்றுள்ளதாகவும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே மக்களவையில் இன்று 11 பிப்ரவரி 2025 தெரிவித்துள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News