Kathir News
Begin typing your search above and press return to search.

"அம்மா, அப்பா இறந்துடுவாங்க! ஆவி புகுந்துடும்" 7 வயதுக் குழந்தையிடம் வேலையைக் காட்டிய மிஷனரிகள்!

அம்மா, அப்பா இறந்துடுவாங்க! ஆவி புகுந்துடும் 7 வயதுக் குழந்தையிடம் வேலையைக் காட்டிய மிஷனரிகள்!
X

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  21 April 2021 11:21 AM GMT

கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் சம்மர் கிளாஸ், டியூஷன் என்று ஏதாவது ஒரு பெயரில் வீட்டில் அடைநாது கிடக்கும் குழந்தைகளை மிஷனரிகள் குறி வைத்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் ஒரு மலை கிராமத்தைச் சேர்ந்த 13 வயது பழங்குடியின சிறுமியை 'டியூஷன்' நடத்தி வந்த பாதிரியார் ஒருவர் கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது அதே போன்று 7 வயது சிறுமியை பயமுறுத்தி மதம் மாற்ற முயற்சித்த சம்பவம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே நடந்துள்ளது. மொடக்குறிச்சி யூனியன் ஈஞ்சம்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட மடத்துப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். அவருடைய ஏழு வயது மகளைத் தான் மிஷனரிகள் குறி வைத்துள்ளனர்.

இரண்டாம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த உஷாராணி மற்றும் விர்ஜினியா என்ற இரு பெண்கள் மதம் மாறுமாறு கட்டாயப்படுத்துவதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டுத் தலத்திற்கு அந்தக் குழந்தையை அழைத்துச் சென்று மதம் மாற்ற முயன்றுள்ளனர்.

மதம் மாறவில்லை என்றால் பெற்றோருக்கு பயங்கர பிரச்சினை வரும் என்றும் இருவரும் இறந்து விடுவார்கள், சிறுமியின் உடலில் ஆவி புகுந்து விடும் என்றெல்லாம் கூறி அந்தச் சிறுமியை அச்சுறுத்தி மன உளைச்லுக்கு ஆளாக்கியுள்ளனர். உஷாராணி, விர்ஜினியா இருவரும் தொடர்ந்து மதம் மாறுமாறு சிறுமியை தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால் பயந்து போன சிறுமி பெற்றோரிடம் நடந்தவை குறித்து கூறியுள்ளார்.

இதையடுத்து இந்து முன்னணி அமைப்பாளர்களின் உதவியுடன் சிறுமியின் தந்தை கோவிந்தராஜன் மலையம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பள்ளிப் பாடங்களையே ஆன்லைன் வகுப்புகள் மூலம் தான் நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் மிஷனரிகள் அதனை மதிக்காமல் கோடைகால வகுப்புகள், சிறப்பு வகுப்புகள், டியூஷன் என்ற பெயரில் குழந்தைகளைத் தொடர்ந்து குறி வைத்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News