கள்ளச்சாராய தேடுதல் வேட்டை.. 7 போலீசார் திடீர் மாயம்.. அதிர்ச்சி தகவல்..
By : Bharathi Latha
தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் திடீரென்று அடர்ந்த வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டைகளை நடத்தி இருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக கல்வராயன் மலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்டிருந்த 20 போலீசாரில் 7 பேர் திடீரென மாயமாகியுள்ளனர். சாப்பிடுவதற்கான வனப்பகுதியை விட்டு வெளியே சென்றவர்கள் திரும்பி வரவில்லை என்று உடன் சென்ற போலீசார் கூறியுள்ளனர். இந்த ஒரு சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் 59 பேர் உயிரிழந்திருப்பது தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் திமுகவுக்கு எதிராக பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளன. இதனால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு CBCID-க்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக கள்ளக்குறிச்சி கல்வராயம் மலைப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்ய போலீசார் தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த தேடுதல் வேட்டை மேற்கொண்டிருந்த 20 போலீசாரில் 7 பேர் திடீரென மாயமாகியுள்ளனர். சாப்பிடுவதற்கான வனப்பகுதியை விட்டு வெளியே சென்றவர்கள் திரும்பி வரவில்லை என்று உடன் சென்ற போலீசார் கூறியுள்ளனர். காணாமல் போன 7 பேரையும் எஞ்சிய போலீசார் தேடி வருகின்றனர். இரண்டு மணிநேரத்திற்கு மேலாகத் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், மாயமான போலீசார் நிலை கேள்விக் குறியாகவே உள்ளது.
Input & Image courtesy:News