Kathir News
Begin typing your search above and press return to search.

தபால் வாக்கு வசதி!! 7 துறையினருக்கு புதிய வாய்ப்பு!!

தபால் வாக்கு வசதி!! 7 துறையினருக்கு புதிய வாய்ப்பு!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 March 2026 7:06 AM IST

இந்தியத் தேர்தல் ஆணையம் சட்டப்பேரவை தேர்தலில் ஆம்புலன்ஸ் சேவை, அரசுப் போக்குவரத்து கழகம், சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட 7 துறையினருக்கு தபால் வாக்கு வசதி புதிதாக வழங்கப்பட உள்ளது என அறிவித்துள்ளது.


85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு மூலம் வாக்கு செலுத்தலாம். தேர்தல் அறிவிக்கை வெளியான 5 நாட்களுக்குள் '12டி' படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.


தீயணைப்பு, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, ஆம்புலன்ஸ், விமானப் போக்குவரத்து, அரசு சாலைப் போக்குவரத்துக் கழகங்கள் ஆகிய 7 துறைகள் புதிதாக இந்த வசதியின்கீழ் வருகின்றன.


தபால் வாக்குகள் மே 4-ம் தேதி காலை 8 மணிக்குள் தேர்தல் அலுவலர்களை சென்றடைய வேண்டும். அரசியல் கட்சிகள், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் விளக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News