வேலை வாங்கித் தருவதாக கூறி 7 லட்சம் மோசடி.. தி.மு.க நிர்வாகி மீது புகார்..
By : Bharathi Latha
கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக கூறி திமுக நிர்வாகி சுமார் 7,00,000 மோசடி செய்ததாக குற்றச்சாட்டு ஒன்று முன் வைக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக திமுக நிர்வாகி மீது புகார் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ரோடு ரெட்டியாபட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடசாமி என்பவர் இவர் போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதுகராக பணியாற்றி ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். இவருடைய மகன்கள் இருவருக்கும் கல்லூரியில் வேலை வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் தான் மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டின் ஜீவகன் என்பவர் இவருக்கு பழக்கமானார்.
மேலும் அவர் தான் திமுக நிர்வாகியாக இருப்பதால் சீக்கிரமாக வேலை வாங்கிக் கொடுப்பேன். 12 லட்சம் கொடுத்தால் கல்லூரியில் இரண்டு மகன்களுக்கும் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியிருக்கிறார். இதை நம்பி வெங்கடசாமி என்பவர் 12 லட்சத்தை கொடுத்து இருக்கிறார். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர் மதுரையில் உள்ள கல்லூரியில் பணியாற்றுவதற்கான உத்தரவு கடிதத்தை கொடுத்து இருக்கிறார். அந்த கடிதத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து தகவல்களும் போலியானது என்று அவர்கள் கல்லூரியில் சென்று கேட்கும் போது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நபர் போலீசில் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். பல்வேறு கட்டங்களாக கேட்ட பிறகு 5 லட்சத்தை மீதம் கொடுத்து இருக்கிறார்.
ஆனால் 7 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறார். இந்த மோசடி தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு ஒன்றே செய்து இருக்கிறார்கள். இதனால் திமுக நிர்வாகி தற்போது தலைமுறைவாகி இருக்கிறார் அவரை தேடும் பணியை போலீசார் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே இவர் மீது கல்லூரி பேராசிரியர் வேலை வாங்கி தருவதாக 7 லட்சம் மோசடி செய்த வழக்கு நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News