மாநிலங்களுக்கான வரி பகிர்வில் தமிழகத்துக்கு 7,268 கோடி!
மாநிலங்களுக்கு வரி பகிர்வாக மத்திய அரசு ரூபாய் 1,78,173 கோடியை விடுவித்தது இதில் உத்தரபிரதேசத்துக்கும் பீகாருக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு ரூபாய் 7,268 கோடி கிடைக்கும்.
By : Karthiga
மத்திய அரசு மாநிலங்களுக்கான வரி பகிர்வை மாதாமாதம் கணக்கிட்டு வழங்கி வருகிறது. இதன்படி வழக்கமாக ரூபாய் 89 ஆயிரத்து 86 அரை கோடி வழங்கப்படும். இந்த நிலையில் நேற்று இருமடங்காக ரூபாய் 1,78,173 கோடியை விடுவித்தது. அக்டோபர் மாதத்துக்கான தொகை முன்கூட்டிய தவணையாக விடுவிக்கப்பட்டிருக்கிறது. வரவிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு மாநிலங்கள் மூலதன செலவினங்களை விரைவு படுத்தவும் அவற்றின் வளர்ச்சி நலத்திட்டங்களின் செலவினங்களுக்கு நிதியளிக்கவும் ஏற்ற வகையில் இந்த வரிப்பகிர்வு விடுவிக்கப்பட்டு இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 28 மாநிலங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்பட்டிருக்கிறது .இதில் உத்தரபிரதேசத்திற்கு அதிகபட்ச தொகையை வழங்கி இருக்கிறார்கள்.
ஆந்திர மாநிலத்திற்கு ரூபாய் 31,962 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பீஹார் மாநிலத்திற்கு ரூபாய் 17,921 கோடியும் ,மத்திய பிரதேசத்துக்கு ரூபாய் 13,987 கோடியும் , மேற்கு வங்காளத்துக்கு ரூபாய் 13 ஆயிரத்து 987 கோடியும் ,மராட்டிய மாநிலத்துக்கு ரூபாய் 11,255 கோடியும் ,ராஜஸ்தானுக்கு ரூபாய் 10 ஆயிரத்து 737 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு ரூபாய் 7,268 கோடியை விடுவித்து உள்ளனர். ஆந்திராவுக்கு ரூபாய் 7,211 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது .அதே நேரத்தில் ஒடிசாவுக்கு ரூபாய் 8,068 கோடி விடுவிக்கப்பட்டு இருக்கிறது.