ரூ. 7,300 கோடி மதிப்பிலான திட்டங்கள்.. நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி..
By : Bharathi Latha
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவாவில் ரூ. 7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதிகம் பின்தங்கிய பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பெண்களுக்கு ஊட்டச்சத்து உதவித் தொகை வழங்கும் ஆஹார் அனுதான் திட்டத்தில் மாதாந்திர தவணைத் தொகையை வழங்கினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவாவில் சுமார் ரூ.7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இன்றைய இந்த வளர்ச்சித் திட்டங்கள் இப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும். அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை வலுப்படுத்தும். அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் சாலை, ரயில், மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கும் இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் ஊக்கமளிக்கும்.
குறிப்பாக பின்தங்கிய பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பெண் பயனாளிகளுக்கு ஆஹார் அனுதான் எனப்படும் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கான மாதாந்திர தவணைத் தொகையைப் பிரதமர் வழங்கினார். ஸ்வாமித்வா திட்டத்தின் பயனாளிகளுக்கு 1.75 லட்சம் அதிகார் அபிலேக் எனப்படும் உரிமைப் பதிவுகளை அவர் வழங்கினார். பிரதமரின் முன்மாதிரி கிராமத் திட்டத்தின் (ஆதர்ஷ் கிராம திட்டம்) கீழ் 559 கிராமங்களுக்கு ரூ.55.9 கோடியை அவர் வழங்கினார்.
வளர்ச்சியின் பயன்கள் பழங்குடியின சமூகத்தினரைச் சென்றடைவதை உறுதி செய்வது மத்திய அரசின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாகும். சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் பழங்குடியின சமுதாயத்தில் பெரும்பகுதியினர் அரசுத் திட்டப் பலன்களைப் பெற முடியவில்லை.
இதன் அடிப்படையில், இந்தப் பிராந்தியத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஆஹார் அனுதன் திட்டத்தின் கீழ் மாதாந்திர தவணைத் தொகையை சுமார் 2 லட்சம் பெண் பயனாளிகளுக்குப் பிரதமர் வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பின்தங்கிய பழங்குடியின பெண்களுக்கு சத்தான உணவுக்காக மாதத்திற்கு ரூ.1500 வழங்கப்படுகிறது.
ஸ்வாமித்வா திட்டத்தின் பயனாளிகளுக்கு 1.75 லட்சம் அதிகார் அபிலேக் எனப்படும் உரிமைப் பதிவைப் பிரதமர் வழங்கினார். இது மக்கள் தங்கள் நிலத்தின் மீதான உரிமைக்கான ஆவண ஆதாரங்களை வழங்கும். மேலும், பிரதமரின் முன்மாதிரி கிராமத் (ஆதர்ஷ் கிராம திட்டம்) திட்டத்தின் கீழ் 559 கிராமங்களுக்கு ரூ.55.9 கோடியைப் பிரதமர் வழங்கியுள்ளார். அங்கன்வாடி மையங்கள், நியாய விலைக் கடைகள், சுகாதார மையங்கள், பள்ளிகளில் கூடுதல் அறைகள் மற்றும் உட்புற சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டுமான நடவடிக்கைகளுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படும்.
Input & Image courtesy: News