Kathir News
Begin typing your search above and press return to search.

மீன் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாகும் இந்தியா:8 சதவீத பங்களிப்புடன் புதிய சாதனை!

மீன் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாகும் இந்தியா:8 சதவீத பங்களிப்புடன் புதிய சாதனை!
X

SushmithaBy : Sushmitha

  |  19 Feb 2025 2:04 PM

உலக மீன் உற்பத்தியில் சுமார் 8 சதவீத பங்கைக் கொண்டு இந்தியா இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி நாடாக உள்ளது

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் 2025-26 இதுவரை இல்லாத வகையில் மீன்வளத் துறைக்கு 2,703.67 கோடி நிதி ஒதுக்கப்பட்டது மேலும் இதற்காக பிரதான் மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சா-யோஜனா அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் ரூபாய் 6000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

மீனவர்கள் விவசாயிகள் செயலிகள் மற்றும் பிற மீன்வளப் பங்குதாரர்களுக்கான கடன் வழங்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு கிசான் கிரெடிட் கார்டு கடன் வரம்பை ரூபாய் 3 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தியது

உற்பத்தி அதிகரிப்பு:மீன் உற்பத்தி 95.79 லட்சம் டன்னிலிருந்து 184.02 லட்சம் டன்னாகவும் 10 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது அதுமட்டுமின்றி பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா ஐந்தாண்டு காலத்திற்கு 2020-21 முதல் 2024-25 வரை ரூபாய் 20,050 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படுகிறது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News