Kathir News
Begin typing your search above and press return to search.

நட்பு நாடான பப்புவா நியூ கினியாவிற்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா! ரூ. 8 கோடி நிவாரணம் அறிவிப்பு...

நட்பு நாடான பப்புவா நியூ கினியாவிற்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா! ரூ. 8 கோடி நிவாரணம் அறிவிப்பு...

SushmithaBy : Sushmitha

  |  29 May 2024 1:28 PM GMT

கடந்த 24ஆம் தேதி அன்று பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் இதுவரை 650 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பப்புவா நியூ கினியாவிற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி உள்ளது.

அதாவது பப்புவா நியூ கினியாவின் நிவாரண பணிக்காக (ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்) 8 கோடியே 30 லட்சம் ரூபாய்யை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில், "பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ஆழ்ந்த வருத்தம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறோம். சாத்தியமான அனைத்து ஆதரவையும் உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து, பப்புவா நியூ கினியா இந்தோ- பசிபிக் தீவுகள் கூட்டமைப்பில் இந்தியாவின் நட்பு நாடு. அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள சோக சம்பவத்திற்கு நிவாரணம் அளிப்பதற்காக மத்திய அரசு ஒரு மில்லியன் டாலர் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News