பிரதமர் மோடியின் 8 ஆண்டுகள் ஆட்சியில் பயனடைந்த 390 லட்சம் கர்ப்பிணி பெண்கள்:பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம்!

2017இல் பிரதம மந்திரி அன்னை பாதுகாப்பு திட்டமான பிரதான் மந்திரி மாத்ரி வந்தனா யோஜனா முன்பு இந்திரா காந்தி மாத்ரித்வா சஹ்யோக் யோஜனா என அறியப்பட்டது பிரதமர் நரேந்திர மோடியால் மறுபெயரிடப்பட்டது
இந்த திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது 19 வயது அல்லது அதற்கு மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு முதல் குழந்தை பிறப்புக்கான நிபந்தனை உடனான பண பரிமாற்று திட்டம் ஆகும் அதாவது பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பின் போது பெண்களுக்கு ஏற்படும் ஊதிய இழப்பிற்காக ஒரு பகுதி ஊதிய இழப்பீட்டை வழங்குகிறது இந்த திட்டம் மேலும் இந்த திட்டம் பாதுகாப்பான பிரசவம் மற்றும் நல்ல ஊட்டச்சத்து மற்றும் உணவு நடைமுறைகளுக்கான சூழ்நிலைகளையும் ஏற்படுகிறது
இந்த நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் 2010-14 வரையிலான 4 ஆண்டுகளில் ரூபாய் 730 கோடி செலவில் சுமார் 16 லட்சம் பெண்களுக்கு மட்டுமே மகப்பேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.பிரதமர் நரேந்திரமோடி 2017 இல் தொடங்கி வைத்த மாத்ரு வந்தனா யோஜனா மூலம் 8 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூபாய் 18000 கோடி செலவில் 390 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது