தி.மு.க. அமைச்சரவையில் 82% அமைச்சர்கள் மீது குற்றப் பின்னணி - புதிய சாதனை படைத்த தி.மு.க!
By : Shiva
தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 34 பேரில் 28 பேர் மீது குற்ற பின்னணிகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிவித்துள்ளது. அதாவது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 82% அமைச்சர்கள் குற்ற பின்னணியில் உள்ளனர் என்பது தெரியவருகிறது.
இதில் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உட்பட 16 அமைச்சர்களுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளுடன் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) உள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது கடுமையான குற்றச்சாட்டுகளுடன் கூடிய குற்ற பின்னணியில் 47% அமைச்சர்கள் உள்ளனர். இதில் முதலமைச்சர் ஸ்டாலின் மீது 47 வழக்குகள் உள்ளது. இதில் பத்து வழக்குகள் கடுமையான குற்றச்சாட்டுகள் உடன் கூடிய வழக்குகள் ஆகும்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கும் எஸ்.எஸ்.சிவசங்கர் மீது 46 கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவற்றில் 7 வழக்குகள் கடுமையான ஐபிசி குற்றங்களாகும். மேலும் இவர் மீது மற்ற ஐபிசி பிரிவுகளின் கீழ் 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 6 அமைச்சர்களின் குற்றப்பின்னணி நிலவரங்கள் தரவுகள் இல்லாததால் தெரியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னராசு, எஸ். ரெகுபதி, எஸ்.முத்துசாமி, கீதா ஜீவன், சக்கரபாணி, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, நாசர், மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ் போன்ற 12 அமைச்சர்கள் மீது கடுமையான குற்றப் பின்னணிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 125 எம்எல்ஏக்களில் 96 எம்எல்ஏக்கள் மீது குற்ற பின்னணிகள் உள்ளது, அவற்றில் 39 எம்எல்ஏக்கள் மீது கடுமையான குற்றம் பின்னணிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மாறாக எதிர்க்கட்சியில் இருக்கும் அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் 15 பேர் மீது மட்டுமே குற்றப்பின்னணி வழக்குகள் உள்ளதும் அவற்றில் 5 பேர் மீது கடுமையான குற்றப் பின்னணி வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Source : ADR