உருமாறும் வைரஸ் சுமார் 85 நாடுகளில் பரவி உள்ளது : WHO அதிர்ச்சி தகவல்!

By : Bharathi Latha
தற்போது உள்ள வீரியமான கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா வைரஸ் என்ற பெயரில் பல நாடுகளில் உள்ள மக்களை பாதித்துக் கொண்டு வருகின்றது. எனவே இதுபற்றி உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட அறிக்கை ஆய்வில், இதுவரை இன்று உருமாறிய டெல்டா வைரஸ் 85 நாடுகளில் கண்டறியப் பட்டுள்ளது என்று WHO தெரிவித்துள்ளது. இது ஒரு சமூக பரவல் மூலமாக நாடுகளில் உள்ள மக்களுக்கு பரவி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றது. குறிப்பாக கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத நகரங்களில் இதன் தொற்று மேலும் அதிகமாக இருந்துதான் வருகின்றது.
உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய்த் தடுப்பு மையம் இதுபற்றி கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 17 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 16 கோடி பேர் குணமடைந்து உள்ளனர். 38 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இதில் முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் அதிக தொற்று பரவல் தன்மை கொண்டதாக உள்ளது.
டெல்டா வைரசால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டெல்டா வைரஸ் பரவுதலில் இதே வேகம் தொடர்ந்தால் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை இது ஏற்படுத்தும். தற்போது இந்த வகை வைரஸ் சுமார் 85 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
