ரூ. 88 கோடி மதிப்புள்ள மெத்தாம் பேட்டமைன் பறிமுதல் உண்மையா? போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிரடி!

போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு கருணை காட்ட மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். ₹ 88 கோடி மதிப்புள்ள மெத்தாம் பேட்டமைன் போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்ததற்காகவும், சர்வதேச போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்ததற்காகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் சிறந்த செயல்திறனுக்கு இது ஒரு சான்றாகும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறும் போது, "போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்குக் கருணை காட்ட மாட்டோம். போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பயணத்தை விரைவுபடுத்தும் வகையில், ₹ 88 கோடி மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள் அடங்கிய பெரிய அளவிலான சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சர்வதேச போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த 4 பேர் இம்பால், குவஹாத்தி மண்டலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள்களுக்கு எதிரான சிறந்த அணுகுமுறைக்கும் சிறந்த செயல்திறனுக்கும் இந்த நடவடிக்கை ஒரு சான்றாகும். போதைப் பொருளைத் தடுப்பதற்கான எங்கள் நடவடிக்கை தொடரும். போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகமான என்சிபி-யின் குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் " என இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.