Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி பிரதிஷ்டை செய்து 892'வது ஆண்டு விழா - விமரிசையான கொண்டாட்டம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி பிரதிஷ்டை செய்து 892வது ஆண்டு விழா - விமரிசையான கொண்டாட்டம்

Mohan RajBy : Mohan Raj

  |  25 Feb 2022 1:30 PM GMT

திருப்பதி உதயமான 892'ஆவது ஆண்டுவிழாவில் திருப்பதியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


வைணவ ஆச்சாரியரான ராமானுஜர் கிபி 1730 ஆம் ஆண்டு திருப்பதி வந்தபோது கோவிந்தராஜபுரம் என பெயர் சூட்டப்பட்டது போன்று வரலாறுகள் கூறுகின்றன. இந்த கல்வெட்டுகளை வைத்து ஆராய்ச்சி செய்த பின்னர் திருப்பதி நகரம் உருவாகி 892 ஆண்டுகள் ஆனதாக தெரியவந்ததால் நேற்று திருப்பதி நகரம் உதயத்தை எம்.எல்.ஏ கருணாகர ரெட்டி தலைமையில் விழாவாக கொண்டாடப்பட்டது. கீழ்திருப்பதி கோவிந்தராஜ சுவாமி திருக்கோவிலில் இருந்து உற்சவருக்கு பூஜைகள் செய்த பின்னர் அங்குள்ள ராமானுஜன் சன்னதியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது.


இந்த ஊர்வலம் திருப்பதி நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக கோவிந்தராஜ சுவாமி கோவிலில் மீண்டும் வந்தடைந்தது.


இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான ஜீயர் கூறியதாவது, "சிவபக்தனான கிருமி கண்ட சோழன் என்னும் அரசன் வைணவ கோயில்களை அழித்து வந்த காரணத்தினால் சிதம்பரத்தில் இருந்த கோவிந்தராஜ பெருமாள் சிலையை கடலில் வீசினார் அப்பொழுது சிலர் அங்கிருந்த கோவிந்தராஜன் உற்சவ சிலையை மறைத்து திருப்பதிக்கு கொண்டு வந்து வைத்து வழிபாடு நடத்தினர் இதனை அறிந்த ராமானுஜர் அவரது 112'வது வயதில் கடந்த 1130'ஆம் ஆண்டு திருப்பதிக்கு விஜயம் செய்த போது கோவிந்தராஜர் கோவிலில் அந்த சிலையை பிரதிஷ்டை செய்தார்.


மேலும் வைணவ முறைப்படி பூஜை முறைகளை வகுத்தார், இதனால் கோவிந்தராஜபுரம் என இப்பகுதிக்கு பெயர் வந்தது. அது சில காலத்துக்குப் பிறகு 'ராமானுஜபுரம்' என்னும் மக்கள் அழைத்தனர். ஆனால் கீழ் திருப்பதியில் அலர்மேலு மங்காபுரம் பத்மாவதி தாயார் பெற்றிருப்பதாலும் மலைமீது அதாவது தாயாரின் கணவரான வேங்கடேசப் பெருமாள் குடி கொண்டிருப்பதாலும் "திருப்பதி" என்ற பெயர் ராமானுஜரால் சுடப்பட்டது. மகாலட்சுமியும் அவரது கணவரும் பெருமாள் குடிகொண்டுள்ள தலம் என இதற்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டது என்று ஜீயர் தெரிவித்தார்.


Source - Maalai Malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News