தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பயிர் காப்பீடு இழப்பீடு 9000 கோடி - மத்திய வேளாண் துறை!
2018 முதல் 2024 வரையிலான காலகட்டம் வரை தமிழகத்திற்கு பயிர் காப்பீடு இழப்பீடு ஒன்பதாயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய வேளாண் துறை தெரிவித்துள்ளது.

By : Karthiga
விவசாயிகள் விளைவிக்கும் பயிர்கள் மழை, வெள்ளம், புயல் மற்றும் கடுமையான கோடை இயற்கை சீற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாகும் போது விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி விடுகிறார்கள். விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பதற்காகவே பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா பயிர் காப்பீடு திட்டத்தை 2016 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் இருந்து மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.இந்த திட்டம் விவசாயி நெற்பயிரை விதைப்பதற்கு முந்தையது முதல் அறுவடைக்கு பிந்தியது வரை காப்பீடு வழங்குகிறது. இதற்காக நாடு முழுவதும் பருவத்திற்கான மிக குறைவான பிரீமியத்தை மத்திய அரசு வசூலிக்கிறது.
அந்த வகையில் குறுவை பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சம் இரண்டு சதவீதம் ராகி பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சம் 1.5% மற்றும் வணிகத் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீட்டு தொகையில் அதிகபட்சமாக ஐந்து சதவீதம் பிரிமியமாக வசூலிக்கப்படுகிறது. ப்ரீமியத்தின் மீதமுள்ள பகுதியை மத்திய மாநில அரசுகள் 50% பகிர்ந்து கொள்கின்றன. புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் பயிர்கள் சேதம் அடையும் போது சேதம் கணிக்கிடப்பட்டு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.அந்த வகையில் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தில் விவசாயிகள் செலுத்திய ப்ரீமியம் மற்றும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகை விவரங்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த 2018 முதல் 2023 - 24 ஆம் ஆண்டு இறுதி வரை பிரீமியம் தொகையாக ரூபாய் 1001 கோடியே 75 லட்சம் செலுத்தப்பட்டு இருக்கிறது. இதில் பல்வேறு இயற்கை பேரிடர் காரணமாக தமிழகத்திற்கு ரூபாய் ஒன்பதாயிரத்து 43 கோடியே 53 லட்சம் இழப்பீடு தொகை காப்பீடு நிறுவனத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. 2022 -2023 இல் பிரீமியம் ரூபாய் 161.88 கோடி இழப்பீடு 916.03 கோடி. 2023 2024 பிரிமியம் ரூபாய் 149.32 கோடி இழப்பீடு ரூபாய் 241.25 கோடி 2018 முதல் 2024 டிசம்பர் 31ஆம் தேதி வரை கருத்தில் கொள்ளும்போது மாவட்டம் வாரியாக செலுத்தப்பட்ட பிரிமியம் பெறப்பட்ட இழப்பீடு விவரமும் வெளியாகி உள்ளது.குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூபாய் 1.02 கோடி பிரீமியம் செலுத்தப்பட்டு ரூபாய் 13.27 கோடி இழப்பீடு பெறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருவாரூரில் ரூபாய் 124.87 கோடி பிரிமியம் பெறப்பட்டுள்ளது.பயிர் சேதத்திற்காக திருவாரூர் மாவட்டத்திற்கு ரூபாய் 1274.91 கோடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
