பாகிஸ்தானில் வறுமை கோட்டிற்கு கீழ் சென்ற 9.5 சதவீத மக்கள்! உலக வங்கி அதிர்ச்சி தகவல்!

By : Sushmitha
பாகிஸ்தானில் பொருளாதாரம் மட்டுமின்றி மனித வளர்ச்சியும் கவலை தரக்கூடிய நிலையில் உள்ளது என உலக வங்கியிலிருந்து தகவல்!
கடந்த ஒரு நிதியாண்டில் 34.2 சதவீதமாக இருந்த பாகிஸ்தானின் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை தற்போது 39.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது பாகிஸ்தானில் தற்போது கொண்டுவரப்பட்ட பொருளாதாரம் மாடல் வறுமையை குறைக்கவில்லை அதற்கு மாறாக மிகவும் மோசமான பொருளாதார நிலையை ஏற்படுத்தி விட்டது. அதிலும் குறிப்பாக முன்பு பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு இணையாக இருந்த பொருளாதாரத்தை கொண்ட நாடுகளை விடவும் தற்போது பாகிஸ்தானில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து விட்டது.
இதனை சமாளிக்க உடனடியாக பாகிஸ்தானில் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வீண் செலவுகளை குறைத்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 5% வரியை உயர்த்த வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கான உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் டோபியாஸ் ஹக் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் தற்போது நிலையான நிதிநிலை இல்லை என்றும், மனித வளர்ச்சி குறைந்து விட்டது என்றும் கூறியுள்ளார். இப்படி ஒரு நிதியாண்டில் கிட்டத்தட்ட 9.5 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வந்துள்ளது பாகிஸ்தானில் நிலவும் பொருளாதாரத்தோடு மனித வளர்ச்சியையும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
