ஏப்ரல் - ஜூன் மாத ஏற்றுமதியில் 9,500 கோடி டாலர் உயர்வு - பியூஸ் கோயல்!
By : Janani
நாட்டில் பொறியியல், நகை மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் போன்ற துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியால் ஜூன் மாதம் ஏற்றுமதியில் 47.34 சதவீதம் அதிகரித்து 32.46 பில்லியன் டாலராக உள்ளது. மேலும் இந்த மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 9.4 பில்லியன் அமெரிக்கா டாலராக இருந்தது என்று வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகம் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்றுமதி நிலவரம் 22 பில்லியன் அமெரிக்கா டாலராக இருந்தது மற்றும் 2019 ஜூன் மாதத்தில் 25 பில்லியன் அமெரிக்கா டாலராக இருந்தது. மே 2021 இல் வெளிப்புற ஏற்றுமதி 32.27 பில்லியன் அமெரிக்கா டாலராக இருந்தது மற்றும் ஏப்ரலில் 31 பில்லியன் டாலராக இருந்தது.
ஜூன் மாதம் இறக்குமதி 96.33 சதவீதம் அதிகரித்து 41.86 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 21.32 பில்லியன் டாலராக இருந்தது மற்றும் 2019 ஜூனில் 41 பில்லியன் அமெரிக்கா டாலராக இறக்குமதி இருந்தது.
இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஏற்றுமதி 95.36 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது, இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு இது 51.44 பில்லியன் அமெரிக்கா டாலராக இருந்தது.
"ஏப்ரல்-ஜூன் காலாண்டின் ஏற்றுமதி இந்தியாவில் வரலாற்றில் இல்லாத அதிகளவிலான ஏற்றுமதி ஆகும்," என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
மேலும் இந்த நிதியாண்டில் ஏற்றுமதியில் 400 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை அடைவதற்குச் சம்மந்தப்பட்ட பங்குதாரர்களுடன் அமைச்சகம் இணைந்தது செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நடைமுறையை எளிமைப் படுத்தியது மற்றும் காலக்கெடு, உரிமைகளை நீடித்தது போன்றவற்றால் ஏற்றுமதியில் சாதனை வளர்ச்சியைக் கண்டது என்று கோயல் தெரிவித்தார்.
மேலும் சேவை ஏற்றுமதி குறித்துப் பேசுகையில், 2025 ஆம் ஆண்டில் ஏற்றுமதி 350 பில்லியன் அமெரிக்கா டாலரை எட்டும் விரைவில் 500 பில்லியன் டாலரை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக அதில் புதிய கூறுகளைச் சேர்க்க அமைச்சகம் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Source: Financial Express