Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் AI முழங்கால் அறுவை சிகிச்சை ரோபோ!

சில்வாசாவில் நமோ மருத்துவமனையைத் திறந்து வைத்து முதல் AI முழங்கால் அறுவை சிகிச்சை ரோபோவை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.

பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் AI முழங்கால் அறுவை சிகிச்சை ரோபோ!
X

KarthigaBy : Karthiga

  |  13 March 2025 6:30 AM

யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர்ஹவேலியில் உள்ள சில்வாசா நகரில் உள்ள நமோ மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் இந்தியாவின் முதல் முழங்கால் மூட்டு மற்றும் ரோபோவான மிசோவையும் அவர் அறிமுகப்படுத்தினார். மேம்பட்ட மருத்துவ சேவை வழங்கும் வகையில் சுமார் ரூபாய் 460 கோடி மதிப்பில் அது நவீன வசதிகளுடன் 450 படிக்கும் வசதி கொண்ட நமோ மருத்துவமனையில் முதல் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் பள்ளிகள், பொது சேவைகள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் என ரூபாய் 2500 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய பல பொதுநல திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

பின்னர் விரைவில் வரவிருக்கும் மருத்துவமனையின் முழு முப்பரிமான மாதிரியை பிரதமர் பார்வையிட்டு நவீன மருத்துவ உட்கட்டமைப்பைப் பாராட்டினார். அப்போது முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையயில் இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ரோபோவான மிசோவின் செயல் விளக்கத்தை மெரிலின் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி விவேக் ஷா வழங்கினார். இந்த ரோபோ அறுவை சிகிச்சையை துல்லியமாக மேற்கொள்வது மட்டுமின்றி நோயாளி விரைவில் குணமடையும் வகையில் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் எலும்பில் அறுவை சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்துகிறது என்று விவேக்ஷா கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News