ஜூன் மாதத்தில் வேலைவாய்ப்பு நிலைமையில் மேம்பாடு - CMIE தகவல்!
By : Janani
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் போது 22.7 மில்லியன் வேலை இழப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கிய நிலையின் ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 7.8 மில்லியன் பேர் மீண்டு வந்துள்ளனர் என்று இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம் (CMIE) தெரிவித்துள்ளது. இது நாட்டின் மொத்த வேலைவாய்ப்பைக் கடந்த மாதம் 383 மில்லியன் ஆக கொண்டிருந்தது.
CMIE தெரிவித்துள்ளபடி, ஜூன் 2021 இல் 7.8 மில்லியன் பேர்களின் வேலைகள் மீட்கப்பட்டுள்ளது, இதில் பெரும்பாலான சம்பள ஊழியர்கள் இந்தியாவில் நகர்ப்புற பகுதியில் இருந்து வந்தவர்கள். ஜூன் 2021 இல் சம்பளம் பெறுபவர்களின் எண்ணிக்கை 6.2 மில்லியனாக இருந்தது. அதில் 4.5 மில்லியன் பேர்கள் நகர்ப்புற இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சில்லறை வர்த்தகம், ஜவுளி மற்றும் கட்டுமானம் போன்றவை நகர்ப்புற இந்தியாவில் கூடுதல் வேலைவாய்ப்பை வழங்கியது. சில்லறை விற்பனையில் மொத்த வேலை வாய்ப்பை 11.2 மில்லியனாக உயர்த்தியுள்ளது. இதில் 7.5 மில்லியன் நகர்ப்புற மற்றும் 3.7 மில்லியன் கிராமப்புற இந்தியாவிலும் உள்ளன. மே மாதத்துடன் ஒப்பிடும் போது ஜூன் மாதத்தில் கட்டுமான துறை 2.2 மில்லியன் வேலைகளையும், ஜவுளி துறை 2.1 மில்லியன் வேலைகளையும் சேர்த்துள்ளது.
CMIE கூற்றுப்படி, கொரோனா தொற்றின் முதல் அலையின் ஊரடங்கைப் போன்று இரண்டாவது அலையிலும் அதிக வேலையிழப்பு பாதிப்பு சிறு வணிகர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்களைப் பாதித்துள்ளது. அவர்கள் ஏப்ரல் மற்றும் மே 2021 இல் 17.2 மில்லியன் வேலையிழப்புகளைச் சந்தித்தனர்.
"கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சியில் இருந்து இன்னும் தொழிலாளர்கள் சந்தைகள் இன்னும் மீளவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது. வேலை வாய்ப்பு, வேலைவாய்ப்பு விகிதம், வேலையின்மை விகிதம் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் போன்றவையின் அளவுகள் 2019-20 யில் இருந்ததை விட மிகமோசமாக உள்ளன" என்று மேலும் தெரிவித்தது.
Source: My Droll