Kathir News
Begin typing your search above and press return to search.

தொண்டர்களை தவறாக வழி நடத்தும் Dr.‌தொல்.திருமாவளவன் - இப்போ என்ன சொன்னார் தெரியுமா?

தொண்டர்களை தவறாக வழி நடத்தும் Dr.‌தொல்.திருமாவளவன் - இப்போ என்ன சொன்னார் தெரியுமா?
X

ShivaBy : Shiva

  |  23 April 2021 6:45 AM IST

முகக்கவசம் அணிவதால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்(டாக்டர்) தெரிவித்துள்ள கருத்துக்கு பொதுமக்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வருடம் கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பலரது உயிரை பறித்தது. உலகிற்கு இது புதிய வைரஸ் என்பதால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவ குழுவினர் தங்களது உயிரையும் பணயம் வைத்து பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் இந்த வைரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்த நோய் தொற்றுக்கு ஒரே தீர்வாக இருப்பது முக கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்று உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை கேட்டுக்கொண்டது.

அதன் அடிப்படையில் கொரோனா முதலாவது அலையை பொதுமக்கள் சமாளித்தனர். இந்தியாவிடம் இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொண்டு வந்தனர். தற்போது இரண்டாவது அலை நாட்டில் பரவி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொல்.திருமாவளவன் முக கவசம் அணிவதால் தோற்ற கட்டுப்படுத்த முடியும் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் முக கவசம் அணிவதன் மூலம் நாம் நோய் தொற்றினை வாங்கிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் இரவு பகலாக தங்களது உயிரையும் பணயம் வைத்து பொதுமக்களின் உயிரை காப்பாற்றி வரும் நிலையில் இது போன்ற சிலர் தங்களின் கருத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பொது ஊடகங்களில் இவ்வாறு பேசி வருகின்றனர். முகக்கவசம் அணிவதன் மூலம் தொற்று பரவாமல் இருப்பதை ஓரளவுக்கு தடுக்க முடியும் என்பதாலேயே முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஆனால் அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் தங்களின் சொந்த கருத்தை கட்சியை சேர்ந்தவர்கள் பின்பற்றுவார்கள் என்று தெரிந்தும் இது போன்று தவறாக வழி நடத்தி வருகின்றனர். இவர்களால் அரசுக்கு உதவி செய்ய முடியவில்லை என்றாலும் இது போன்று அவதூறு பரப்பாமல் இருந்தால் போதும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு தன்னை பின்பற்றுபவர்களை தவறாக வழி நடத்துபவர் தலைவராக இருக்க முடியாது என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News