வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு(ELI)மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

By : Sushmitha
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாட்டில் வேலை வாய்ப்பை ஊக்குவிப்பதற்கு வேலை வாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது அதன்படி நாட்டில் 3.5 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை ரூபாய் 99,446 கோடி செலவினத்துடன் இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்படுவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது
இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாக புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு மாத சம்பளம் ரூபாய் 15,000 வரை இரண்டு தவணைகளாக வழங்கப்படும் அதுமட்டுமின்றி நிறுவனங்கள் உருவாக்கும் புதிய வேலைகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ரூபாய் 3,000 வரை சலுகை கிடைக்கும் அதிலும் உற்பத்தி துறையில் இந்த சலுகை மூன்றாவது மற்றும் நான்காவது ஆண்டுகளுக்கும் தொடரும்
இதன் மூலம் உற்பத்தி துறையில் கவனம் செலுத்துதல் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்துதல் மற்றும் சமூக பாதுகாப்பு முதல்முறையாக வேலைக்கு வருபவர்களுக்கான பயன்கள் என பல முக்கிய அம்சங்களை இந்த திட்டம் கொண்டுள்ளது
