Kathir News
Begin typing your search above and press return to search.

'அரியலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது' : EPS அறிக்கை!

அரியலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது : EPS அறிக்கை!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  18 Jun 2021 6:31 AM IST

கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த மீதேன் திட்டத்தை தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதியில் செயல்படுத்த மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றவர் தி.மு.க வை சேர்ந்த மூத்த தலைவர் டி.ஆர். பாலு. அதே போல் 2011 ஆம் ஆண்டு ஆழ்த்துளை கிணறு அமைத்து ஆய்வுப்பணி துவங்க அனுமதி அளித்ததும் தி.மு.க அரசு தான். இவ்வாறு இருக்கையில் அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு ONGC நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதியளிக்க கூடாது என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் EPS அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில் அவர் கூறுகையில் " 2016 ஆம் ஆண்டு அம்மா முதலமைச்சராக இருந்த போது டெல்டா மண்டலத்தில் விவசாயிகளை பாதிக்கும் மீதேன், ஷெல் ஆகிய எந்த திட்டத்தையும் அனுமதிக்கவில்லை. அதே போல் நான் முதலமைச்சாராக இருந்த பொது இந்த விவசாய நிலங்களில் எந்த திட்டமும் வராதவாறு டெல்டா மாவட்டத்தை "பாதுகாக்கப்பட்ட டெல்டா மண்டலமாக" அறிவிதேன். மேலும் எங்களது ஆட்சியில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் ஆழ்த்துளை கிணறு அமைப்பதற்கு ONGC மற்றும் Vedanta மத்திய அரசிடம் குறிப்பு விதிமுறை பெற்றுள்ள நிலையில், இந்த எரிவாயு கிணறுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டேன். மேலும் இந்த ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை ஒப்புதல் அளிக்க கூடாது என்று நான் முதலைவராக இருந்த போது உத்தரவிட்டேன். அதுமட்டுமின்றி இது போன்ற திட்டங்களுக்கு அந்த பகுதி மக்களின் கருத்து கேட்ட பின்னரே பரிசீலிக்க வேண்டும் என்று நான் பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.


இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு ONGC நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது தெரிய வந்தது. மாண்புமிகு அம்மாவின் ஆட்சியின் போது ONGC நிறுவனமோ அல்லது இதுபோன்ற இதர எண்ணெய் நிறுவனங்களுக்கோ அனுமதி அளிக்காமல் இருந்தார்கள். அதே போல் தமிழகத்தின் முதமைச்சர் ஸ்டாலின் இந்த ONGC யின் ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." என்று அவர் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News