Kathir News
Begin typing your search above and press return to search.

மதக்கலவரத்தை தூண்டும் விதமாக சர்ச்சை பேச்சு : பாதிரியார் மீது பாய்ந்த F.I.R!

மதக்கலவரத்தை தூண்டும் விதமாக சர்ச்சை பேச்சு : பாதிரியார் மீது பாய்ந்த F.I.R!
X

ShivaBy : Shiva

  |  23 July 2021 7:16 AM IST

பாரதமாதா மீது கால்கள் பட்டால் சொறி சிரங்கு வந்து விடும் என்பதற்காக செருப்பு அணிந்து கொள்கிறோம் என்றும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் இறுதிக் காலம் பரிதாபமாக இருக்கும் என்றும் பேசிய கிறிஸ்தவ மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையரிடம் பா.ஜ.க. மாநில செயலாளர் அஸ்வத்தாமன் புகார் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா கலந்து கொண்டு இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாகவும் பேசியுள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பா.ஜ.க.வின் மாநில செயலாளராக இருக்கும் அஸ்வத்தாமன் இது குறித்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

தனது புகார் கடிதத்தில் "ஒரு குறிப்பிட்ட மதத்தை கொச்சைப்படுத்துதல், ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மனதை புண்படுத்துதல், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தல், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மனதை புண்படுத்தி அதன்மூலம் கலவரத்தை தூண்டுதல், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்தியாவின் மீது வெறுப்புணர்வையும் இழிவு உணர்வை தூண்டும் வகையிலும், தேசத் துரோகம் இழைக்கும் வகையில் பேசுதல் போன்ற குற்றங்களுக்காக கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் அளித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பொது மக்கள் இந்த புகார் மாதிரியைப் பயன்படுத்தி தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பாதிரியார் மீது 7பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக கிறிஸ்தவ பாதிரியார் தி.மு.க. வெற்றி பெற்றது நாங்கள் போட்ட பிச்சை என்றும், பாரதமாதாவை அசிங்கம் மற்றும் ஆபத்தானவர் என்றும், இந்துக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம் எங்களின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்றும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமித்ஷாவின் இறுதிக்காலத்தில் நாய்களும் புழுக்களும் சாப்பிடும் நிலை ஏற்படும் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News