Kathir News
Begin typing your search above and press return to search.

மின்வெட்டினால் ICUவில் இருந்த பெண் மரணம்.. தி.மு.க அரசின் அலட்சியம்.. அண்ணாமலை கண்டனம்..

மின்வெட்டினால் ICUவில் இருந்த பெண் மரணம்.. தி.மு.க அரசின் அலட்சியம்.. அண்ணாமலை கண்டனம்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 Nov 2023 1:06 AM GMT

திமுக அரசின் அலட்சியம் காரணமாக தற்பொழுது அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் ஒருவர் மரணம் அடைந்து இருக்கிறார். அதுவும் மின்வெட்டு காரணமாக அவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவ உதவிகள் கொடுக்க முடியாத காரணத்தினால் அவர் மரணம் அடைந்து இருக்கிறார். இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தன்னுடைய கண்டன பதிவு செய்து இருக்கிறார். இது பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறும் பொழுது, " திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், அரை மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு காரணமாக மரணமடைந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.



திமுக ஆட்சியில், ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள், எத்தனை துச்சமாக நடத்தப்படுகின்றன? என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது. அரசு மருத்துவமனைகள் இத்தகைய அவல நிலையில் இருக்கும்போது, தமிழக மருத்துவக் கட்டமைப்பை ஐரோப்பிய நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும் என்று வெட்கமே இல்லாமல் கூறிக்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.


ஊழல் செய்து சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை என்றால், தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சைதான் வழங்க வேண்டும் என்று ஓடோடிச் செல்லும் திமுக அரசு மற்றும் அமைச்சர்கள், ஏழை எளிய மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகளை, இத்தனை கவனக்குறைவாக நடத்துவதற்கு தமிழக பாஜக சார்பாக வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயர சம்பவத்தில் பலியான சகோதரி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க, திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தன்னுடைய பதிவை பதிவு செய்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News