வெடிகுண்டு திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!! NIA விசாரணையில் வெளிவந்த உண்மை!!

By : G Pradeep
கடந்த 10ம் தேதி டெல்லி செங்கோட்டை பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழப்பும், 20க்கும் ஏற்பட்டோருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. இந்த காரை இயக்கிக் கொண்டு வந்த டாக்டர் உமர் காரிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட டாக்டர் அடில் மற்றும் முஜாமில் சகீல் ஆகியோரிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தி வந்த நிலையில் பல தகவல்கள் தெரிய வருகிறது.
ஜெய்ஸ் இ முகமத் தீவிரவாத அமைப்பின் வழிகாட்டுதல் படி இந்த தாக்குதலை நடத்தியதாகவும் இதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. டெல்லியில் கிட்டத்தட்ட ஆறு இடங்களிலும், இதரப் பகுதிகளில் நான்கு நகரங்களிலும் இது போன்ற தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்ததாகவும், பலமுறை விற்கப்பட்ட கார்களை இதற்காகவே வாங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதலுக்கு பரிதாபாத்தை சேர்த்த எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், வாங்கப்பட்ட கார்களில் சில மாற்றங்களை செய்து வந்ததாக தேசிய புலனாய்வு விசாரணை ஏஜென்சி கண்டுபிடித்துள்ளது. இந்நிலையில் ஹரியானாவில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்றில் பின்பக்கம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரையும் அந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் மற்றொரு காரில் வெடிகுண்டு இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக திரட்டப்பட்ட இந்த வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கு பொருட்களை வாங்கியதாகவும், குருகிராம், நுஹ் மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து 20 குவிண்டால்களுக்கு அதிகமான NPK உரத்தை விலக்கி வாங்கியது தெரியவந்துள்ளது. இந்த NPK உரம் என்பது நைட்ரஜன், பரஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் கலவையாகும். இந்த மூன்றையும் பயன்படுத்தி IED பொருட்களை தயாரித்து இருக்கலாம் என்று தகவல் கூறப்பட்டு வருகிறது.
