பாகிஸ்தான் தாக்குதல்களைத் தடுத்த ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு:இலக்கை தவறவிட்ட சீன PL-15 ஏவுகணை!

By : Sushmitha
இன்று மே 12 முப்படைகளின் இயக்குநர் ஜெனரல்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர் அதில் பாகிஸ்தானின் நடவடிக்கைகளை இந்தியா எவ்வாறு கண்காணித்து பாகிஸ்தானிய மிராஜ் ஜெட் உட்பட அவர்களின் தவறான சாகசங்களை அழித்தது என்பதற்கான வீடியோ காண்பிக்கப்பட்டது
பிறகு பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி ஆபரேஷன் சிந்தூரின் முதல் கட்டத்தில் பயங்கரவாத உள்கட்டமைப்பை மட்டுமே இந்தியா தாக்கியது என்றும், ஆனால் பாகிஸ்தான் இராணுவத்தின் பதிலடிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாதுகாப்பு தளங்களை குறிவைக்க ஆயுதப்படைகளுக்கு அவசியமானது என்றும் ஒருங்கிணைந்த வான் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பல்வேறு வகையான AD சென்சார்கள் மற்றும் ஆயுத அமைப்புகளைக் கொண்ட பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பின் பங்கையும் எடுத்துரைத்தார்
பாகிஸ்தானின் ட்ரோன்களை முறியடிக்க இந்தியாவுக்கு உதவிய பெச்சோரா, OSA-AK மற்றும் LLAD துப்பாக்கிகள் மற்றும் ஆகாஷ் அமைப்பு போன்ற உள்நாட்டு AD ஆயுதங்களை குறிப்பாகக் குறிப்பிட்டு இதற்கு நேர்மாறாக சீனாவின் PL-15 ஏவுகணை இலக்கைத் தவறவிட்டதாலும், துருக்கிய ட்ரோன்கள் இந்தியாவால் அழிக்கப்பட்டதாலும், இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல்கள் தோல்வியடைந்தன என தெரிவித்துள்ளார்
அதோடு இந்திய அரசு அதிநவீன உபகரணங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளைப் பெறுவதில் வழங்கிய உறுதியான பட்ஜெட் மற்றும் கொள்கை ஆதரவு காரணமாக கடந்த பத்தாண்டுகளில் இந்த சக்திவாய்ந்த AD சூழலை ஒன்றிணைத்து செயல்படுத்துவது சாத்தியமானது என்று கூறியுள்ளார்
