Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி அரசின் PLI திட்டத்தினால் இவ்வளவு நன்மைகளா.. உயரும் இந்தியாவின் உற்பத்தித்திறன்..

மோடி அரசின் PLI திட்டத்தினால் இவ்வளவு நன்மைகளா.. உயரும் இந்தியாவின் உற்பத்தித்திறன்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Jan 2024 6:02 AM GMT

உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டங்களில் 2023, நவம்பர் வரை ரூ.1.03 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டங்கள் மூலம் 2023, நவம்பர் வரை ரூ.1.03 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது இது ரூ.8.61 லட்சம் கோடி உற்பத்தி மற்றும் விற்பனைக்கும், 6.78 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் வழிவகுத்தது. பெரிய அளவிலான மின்னணு உற்பத்தி, மருந்துகள், உணவு பதப்படுத்துதல், தொலைத்தொடர்பு, கட்டமைப்பு போன்ற துறைகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுடன் இத்திட்டங்கள் ரூ.3.20 லட்சம் கோடியைத் கடந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி, 14 துறைகளில், 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய, 746 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்த மருந்துகள், மருத்துவ சாதனங்கள், மருந்து உற்பத்தி, தொலைத்தொடர்பு, உணவு பதப்படுத்துதல், ஜவுளி, ட்ரோன்கள் போன்ற துறைகளில் 176 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெருநிறுவனங்களின் முதலீட்டு பங்குதாரர்கள், ஒப்பந்த உற்பத்தியாளர்களாக செயல் படுகின்றன.


பெரிய அளவிலான மின்னணு உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப வன்பொருள், மருத்துவ சாதனங்கள், மருந்துகள், தொலைத்தொடர்பு, கட்டமைப்பு, உணவு பதப்படுத்துதல், ட்ரோன்கள், ட்ரோன் உதிரிபாகங்கள் ஆகிய 8 துறைகளுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகைத் திட்டங்களின் கீழ் சுமார் ரூ.4,415 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் 82% மொபைல் போன் ஏற்றுமதிக்கு இத்திட்டப் பயனாளிகள் 20% சந்தை பங்கை மட்டுமே அளித்துள்ளனர். மொபைல் போன்களின் உற்பத்தி 125%க்கும் அதிகமாகவும், மொபைல் போன்களின் ஏற்றுமதி 2020-21 நிதியாண்டிலிருந்து 4 மடங்கும் அதிகரித்துள்ளது.


உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் காரணமாக, மருந்துத் துறையில் மூலப்பொருட்களின் இறக்குமதி கணிசமாகக் குறைந்துள்ளது. பென்சிலின்-ஜி உள்ளிட்ட தனித்துவமான இடைநிலை பொருட்கள், பெருமளவிலான மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ, கேத் லேப், அல்ட்ராசோனோகிராபி, டயாலிசிஸ் இயந்திரம், இதய வால்வுகள், ஸ்டென்ட்கள் போன்ற 39 மருத்துவ உபகரணங்களின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகைத் திட்டங்கள் இந்தியாவின் ஏற்றுமதியை பாரம்பரிய பொருட்களிலிருந்து மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் போன்ற உயர் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளாக மாற்றியுள்ளன.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News