பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் ஹபீப் மீது பாய்ந்த POCSO!
By : Shiva
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளதால் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஹபீப். இவர் மாணவிகளை தனது பாலியல் இச்சைக்கு பணியவைக்க முயன்ற ஆடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் ஆடியோவில் இருப்பது ஆசிரியர் ஹபீப் குரல் தான் என்பதை உறுதி செய்து பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.
முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைதுhttps://t.co/95NXIqRyC2
— தினமணி (@DinamaniDaily) June 22, 2021
வீட்டிற்குத் தெரியாமல் மாணவிகளை தனியாக வீட்டிற்கு வரச் சொல்லும் ஆசிரியர் இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று பேசும் ஆடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆசிரியர் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்ததை அடுத்து ஆசிரியரை கைது செய்த காவல்துறையினர் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
ஆசிரியர்கள் பாலியல் தொல்லையில் ஈடுபடுவது தொடர்கதையாகி வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளி கல்லூரிகளில் நடக்கும் இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் வெளிவராத சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை வெளிக்கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.