Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க தலைவர் SG சூர்யாவின் வடகிழக்கை வென்ற வரலாற்றின் விறுவிறுப்பான விவரணை!

2011 மற்றும் 2014-க்கு இடைப்பட்ட கால கட்டத்தில் புனேவில் உள்ள ஒரு விடுதியில் இரு நண்பர்கள் இருந்தார்கள். ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த தலைமுறை தலைமுறையாக ஜன் சங்கத்துடன் தொடர்புடைய பா.ஜ.க ஆதரவாளர் SG சூர்யா; மற்றொருவர் அஸ்ஸாமைச் சேர்ந்த காங்கிரஸ் ஆதரவாளர் சாந்த் ரக்ஷிக் மனு ஷர்மா.

பா.ஜ.க தலைவர் SG சூர்யாவின் வடகிழக்கை வென்ற வரலாற்றின் விறுவிறுப்பான விவரணை!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  3 March 2021 3:00 AM GMT

2011 மற்றும் 2014-க்கு இடைப்பட்ட கால கட்டத்தில் புனேவில் உள்ள ஒரு விடுதியில் இரு நண்பர்கள் இருந்தார்கள். ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த தலைமுறை தலைமுறையாக ஜன் சங்கத்துடன் தொடர்புடைய பா.ஜ.க ஆதரவாளர் SG சூர்யா; மற்றொருவர் அஸ்ஸாமைச் சேர்ந்த காங்கிரஸ் ஆதரவாளர் சாந்த் ரக்ஷிக் மனு ஷர்மா.

இவர்கள் இருவரும் தங்ளுடைய மாநிலத்தைப் பற்றிய செய்திகளை பகிர்ந்துக் கொண்டார்கள். குறிப்பாக வட இந்தியர்களுக்கும் சரி தென்னிந்தியர்களுக்கும் சரி ஒரு புதிராகவே விளங்கி வரும் வடகிழக்கு இந்த தமிழ் இளைஞருக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து இந்த புரிதல் வடகிழக்கில் பாரதிய ஜனதா எவ்வாறு வெற்றி பெற்றது என்பது குறித்து ஒரு புத்தகம் எழுத உதவியது. அது தான் இந்த 'வடகிழக்கை பா.ஜ.க வென்ற வரலாறு' புத்தகம்.

தமிழில் எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகம் சுருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நெருங்கவே முடியாத கோட்டையாக தோன்றிய வடகிழக்கில் தாமரை மலர்ந்தது எப்படி என்று SG சூர்யா இந்த புத்தகத்தில் விளக்கியுள்ளார். இந்த புத்தகத்தை எழுதியதன் பின்னால் மற்றொரு நோக்கம் இருக்கிறது. அது தமிழ்நாட்டிலும்‌ தாமரையை மலரச் செய்வது. அதை பின்னால் பார்க்கலாம்.

2014-ஆம் ஆண்டு பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்தது. அமித் ஷா கட்சித் தலைவர் ஆனார். கடந்த காலத்தில் மறைந்த பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயை விமர்சித்து கடிதம் எழுதிய அதே அமித் ஷா இன்று கட்சித் தலைவர் பொறுப்புக்கு உயர்ந்து விட்டார். பா.ஜ.க ஒழுக்கத்துக்கும் ஜனநாயகத்துக்கும் பெயர் போன கட்சி. இங்கு தலைமுறை தலைமுறையாக கட்சித் தலைவர்கள் தோன்றுவதோ குடும்பத்தினர் குழாமிடுவதோ இல்லை.

பா.ஜ.க-வின் பெரும்பாலான தேசியத் தலைவர்கள் யாரென்றே தெரியாத சாதாரண தொண்டராக இருந்து தான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளனர். SG சூர்யா தனது புத்தகத்தில் பா.ஜ.க தலைவர் என்ற பொறுப்பு எந்த அளவுக்கு முக்கியமானது என்றும், அதை தனது திறமை மூலம் ‌பெற்ற அமித் ஷா தலைமைப்‌ பொறுப்பிலும் அதனை எப்படி நிரூபித்துக் காட்டினார் என்றும் சுவாரசியமான தகவல்களுடன் விளக்கியுள்ளார்.

உத்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலிலேயே அமித் ஷா தனது வியூகத் திறமையைக் காட்டி விட்டார். ஆனால், அவரால் வட கிழக்கில் சாதிக்க முடியுமா? இதைப் பற்றித் தான் இந்தப் புத்தகம் விறுவிறுப்பாக விவரிக்கிறது. வடகிழக்கில் பா.ஜ.க காலூன்றியது கட்சிக்காக மட்டுமல்ல. தேசப் பாதுகாப்பு தான் அதை விட முக்கியமான நோக்கம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் சீனர்களை அவர்கள் இஷ்டத்துக்கு ஆட விட்டதன் விளைவு, வடகிழக்கு சீனாவின் பிடியில் சிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி இருந்தது. அங்கு இந்தியாவுக்கு எதிரான மனநிலையை விதைத்து அதை சாதகமாகப் பயன்படுத்தி ராணுவத்தை சிறிது சிறிதாக உள்நுழைக்க சீனா முயன்றிருக்கும். இது தேசத்துக்கே ஆபத்தானது.

ஆனால் பா.ஜ.க அங்கு காலூன்றுவது சீனாவை வாலாட்ட விடாமல் செய்யும். எனவே வடகிழக்கில் அமித் ஷா செய்த மாயாஜாலம் கட்சிகான வெற்றி என்பதை விட தேசப் பாதுகாப்பின் முக்கிய அம்சம் என்றே பார்க்கப்பட வேண்டும்.

பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸூம் அஸ்ஸாமில் சத்தமில்லாமல் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். பிரிவினை நடந்த காலத்தில் இருந்தே அஸ்ஸாம் அகதிகள் ஊடுருவும் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறது. அங்கு நடந்த மாணவர் போராட்டம், அது போன்ற‌ மக்கள் போராட்டங்களை கையாள அப்போதைய‌ பிரதமர் இந்திரா காந்தி பயன்படுத்திய அடக்குமுறை, அதன் தொடர்ச்சியாக சமூகத்தில் சில பிரிவினரை திருப்திப்படுத்த காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள், இவற்றால் இஸ்லாமிய சக்திகள்‌ கிட்டத்தட்ட அஸ்ஸாமை‌ கைப்பற்றும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டன.

அமித் ஷாவின் வியூகங்களில் இரண்டு முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று உடனடி விளைவான அரசியல் வெற்றி; மற்றொன்று நீண்ட கால நோக்கமான தேசப் பாதுகாப்பு. அமித் ஷா 'வெல் அல்லது வெல்பவர்களைப் உள்வாங்கு' என்ற சொல்லாடலுக்கு இணங்க வகுத்த வியூகத்தை SG சூர்யா விளக்குகிறார். இந்த விஷயத்தில் காங்கிரசின் குடும்ப அரசியல் ஷாவுக்கு உதவியாக அமைந்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வயது தான் அதன் ஆட்சிக் காலத்தில் அஸ்ஸாம் சுகாதார அமைச்சராக இருந்த ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கும். ஆனால் சர்மா காங்கிரசுக்கு கிடைத்த பொக்கிஷம். அவர் அரசியல் நுணுக்கங்கள் தெரிந்தவர். ஆனால் காங்கிரஸ் அவரை தள்ளி வைத்தது மட்டுமல்லாமல் அவமானப்படுத்தவும் செய்தது. இதனால் அவர் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

நவீன கால சாணக்கியர் என்று அழைக்கப்படும் அமித் ஷா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். காங்கிரசின் இழப்பு பா.ஜ.க-வுக்கும் தேசத்துக்கும் நன்மையாக முடிந்தது. 2016-ஆம்‌ ஆண்டு பா.ஜ.க அஸ்ஸாமில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் பின்னணியில் இருந்தது ஹிமந்தா சர்மா. இது எப்படி சாத்தியமானது என்று ஒரு த்ரில்லர் கதையைப் போல SG சூர்யா விவரித்திருக்கிறார்.

பின்னர் அமித் ஷாவின் கண்கள் ஏழு சகோதரிகள் என்று‌ அறியப்படும் மணிப்பூர், நாகாலாந்து, அருணாசல பிரதேசம், திரிபுரா, மேகாலாயா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்கள் மீது விழுந்தன. அடுத்த நான்கே ஆண்டுகளில் இந்த அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க-வோ அல்லது பா.ஜ.க பங்கு வகிக்கும் கூட்டணியோ கோட்டையைப் பிடித்தன. இது ஒன்றும் சும்மா வந்துவிடவில்லை. கட்சி உறுப்பினர்களும் தலைவர்களும் பல தியாகங்கள் செய்து ரத்தம் சிந்தியதால் தான் சாத்தியமானது.

இந்த தியாகங்கள் குறித்து SG சூர்யா விவரிக்கும் போது நமது கண்களில் கண்ணீர் துளிர்ப்பதைத் தவிர்க்க முடியாது. முழுக்க முழுக்க கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்த திரிபுராவில் காவிக் கொடியை பறக்கச் செய்ததை சூர்யா ஒரு ஆய்வாகவே செய்திருக்கிறார். திரிபுராவில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளால் ஏற்பட்ட சீரழிவை எதிர்கொள்ள பா.ஜ.க தெளிவான கொள்கை கொண்ட சிறந்த அரசியல் சக்தியாக இருக்கும் என்று நினைத்துள்ளனர்.

இருந்தாலும், இதற்கு இன்னும் இரண்டு முக்கியமான காரணங்களை SG சூர்யா சுட்டிக் காட்டுகிறார். ஒன்று, மாநிலத்தை திவாலாக்கி விட்டு பொருளாதார ரீதியாக மக்களை முன்னேற விடாமல் எல்லாவற்றுக்கும் முட்டுக்கட்டை போட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி; இரண்டு கம்யூனிஸ்ட்கள் மற்றும் பிரிவினைவாதிகள் உடனான போரில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வினர் செய்த தியாகம்.

திரிபுராவின் முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் மிகவும் எளிமையான, ஊழலே செய்யாத மக்கள் தலைவர் என்று தான் நம்மிடையே ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு திராவிடர் கழகத்தினர் வேறு உதவுகிறார்கள். இந்த பொய் பிம்பத்தை உடைத்து உண்மை நிலையை வெளிப்படுத்த இந்த புத்தகத்தில் SG சூர்யா முயன்றிருக்கிறார். இதன் மூலம் மாணிக் சர்க்கார் நாம் நினைத்தது போல் ஹீரோவெல்லாம் இல்லை, வில்லன் என்று தெளிவாகிறது.

தனிநபர்கள், உள்ளூர் செய்தித் தாள்கள், கட்டுரைகள், வடகிழக்கு குறித்து ஆன்லைனில் கிடைக்கும் தகவல்கள் என்று புத்தகத்தை இன்னும் சுவாரசியமாக்க பெரும் முயற்சி எடுத்திருக்கிறார் SG சூர்யா. இந்த புத்தகத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால், இது சாதாரண புத்தகங்கள் போல் ஒரு தேர்தல் வெற்றியைப் பற்றி மட்டும் பேசவில்லை.

அதற்கும் மேல் இந்த வெற்றிகள் தேசப் பாதுகாப்பில் எவ்வளவு முக்கியமான பங்கு வகிக்கின்றன என்று வாசகர்களுக்கு விளக்குகிறது. ஏதோ இத்தனை நாட்களாக வடகிழக்குக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தாமல், இத்தனை நாட்களாக கண்டுகொள்ளாமல் விடப்பட்டு பொருளாதார ரீதியாகவும், தொடர் பிரிவினைவாத வன்முறையாலும் புண்ணாகி இருக்கும் பூமிக்கு செழிப்பைக் கொண்டு வருவது பற்றி பேசுகிறது இந்த புத்தகம்.

புத்தகத்தின் அட்டைப்படத்தில் பாரத மாதா வடகிழக்கு கலாச்சாரத்துக்கே உரித்தான உடையை அணிந்திருக்கிறார். ஒரு தமிழ்ப் புத்தகத்தில் வடகிழக்கு உடை அணிந்த பாரத மாதாவின் படம் போடடிருப்பதே இந்த புத்தகம் என்ன மாதிரியான கருத்தைச் சொல்ல விரும்புகிறது என்பதற்கு சான்றாகிறது. இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் SG சூர்யா இன்னும் அதிகமாக பெயரும் புகழும் பெற்றிருக்கலாம்.

ஆனால், தமிழில் எழுதக் காரணம் என்ன? தமிழகமும் இப்படி ஒரு மலர்ச்சிக்கு காத்திருப்பது தான். தமிழகத்தில் இந்தியாவை சுக்குநூறுக்கும் எண்ணத்துடன் இருப்பவர்கள் தமிழகத்தை இந்திய எதிர்ப்புக்கான ஒரு ஆய்வுக் கூடமாகவே மாற்றி விட்டார்கள். எனினும் தமிழ் கலாச்சாரத்தின் முகமே சனாதன தர்மமும் வேதங்களும் தான் என்பதால் வாய்ப்பு இருக்கிறது.

சிற்சில முட்டுக்கட்டைகள் மட்டும் முறியடிக்கப்பட்டு விட்டால் தமிழகம் குஜராத்தை விட வலிமையான காவிக் கோட்டையாக மாறும் என்று கூட சொல்லலாம். ஆனால் அதற்கு இந்திய எதிர்ப்பு சக்திகளின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். இந்த புத்தகம் அதைத் தான் செய்கிறது. தமிழகத்தின் மீது பற்றுக் கொண்ட அனைவரும் இந்த புத்தகத்தை ஆதரித்து தமிழகம் அதன் அரசியல் மற்றும் கலாச்சார வேர்களை கண்டறிய உதவ வேண்டும்.

புத்தகத்தை பெற - Amazon

Article Credits - Swarajya Magazine

Next Story
கதிர் தொகுப்பு
Trending News