மின்சார SUVகார்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய மகேந்திரா திட்டம்!

மஹிந்திரா& மஹிந்திரா நிறுவனம், தனது எஸ்யூவி மின்சார கார்களுக்கான, மின்சார பேட்டரிகளை எல்ஜி எனர்ஜி & சொல்யூஷன் நிறுவனத்திடம் பெறவுள்ளது.
நாட்டின் முன்னணி கார் நிறுவனமாக மஹிந்திரா&மஹிந்திரா நிறுவனம் திகழ்ந்து வருகிறது. உள்நாட்டு கார் உற்பத்தியை வெற்றிகரமாக செய்து வரும் இந்நிறுவனம், மின்சாரத்தைக் கொண்டு ஓடும் நான்கு கார்களை பெருமளவு உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்காக 2018ல் தென்கொரிய நிறுவனமான எல்ஜி எனர்ஜி &சொல்யூஷன் நிறுவனத்திடம் மஹிந்திரா நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் கடந்த வாரம் மஹிந்திரா நிறுவனம், $9.1 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் அதன் புதிய EV யூனிட்டிற்காக பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட்டிலிருந்து $250 மில்லியன் டாலர்களை திரட்டியது.
இதனால், வரக்கூடிய செப்டம்பர் மாதம் XUV400 தொடங்கி, அடுத்து வரக்கூடிய 5 ஆண்டுகளில் அதிக அளவில் மின்சார SUV கார்களை தயாரிக்க மும்முரம் காட்டி வருகிறது மஹிந்திரா நிறுவனம்.
அதிக அளவில் மின்சார கார்களை இந்தியர்கள் பயன்படுத்துவதன் மூலம், எரி பொருட்களுக்காக வெளிநாட்டை சார்ந்திருக்கும் நிலை குறையும் மற்றும் காற்று மாசுபடுதலும் குறையும் என்று நம்பலாம்.