Kathir News
Begin typing your search above and press return to search.

ஜாபர் சாதிக் வெளிநாட்டிற்கு தப்பாத வகையில் லுக் அவுட் நோட்டீஸ், சிக்கிய சிசிTV காட்சிகள்!.

ஜாபர் சாதிக் வெளிநாட்டிற்கு தப்பாத வகையில் லுக் அவுட் நோட்டீஸ், சிக்கிய சிசிTV காட்சிகள்!.

SushmithaBy : Sushmitha

  |  4 March 2024 6:28 AM GMT

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியில் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக் குமார், சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான் ஆகியோரை போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மத்திய போதை பொருள் தடுக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 75 கோடி சூடோபெட்ரின் எனப்படுகின்ற போதை பொருள் தயாரிக்க பயன்படும் வேதிப்பொருளை பறிமுதல் செய்தனர்.

இதனை அடுத்து போதை கடத்தல் விவகாரத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் இந்த போதைப்பொருள் களத்தில் கும்பல் தலைவராக சென்னையில் வசித்து வரும் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் செயல்பட்டுள்ளதாகவும் அதனால் டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவால் உலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அதிகாரிகள் சம்மன் நோட்டீசை ஒட்டினர்.

ஆனால் ஜாஃபர் சாதிக் தன் சகோதரர்களுடனும் குடும்பத்தாரோடும் தலைமறைவாக உள்ளார். இதனை அடுத்து அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஜாபர் சாதிக்கு வீட்டில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அங்கு நிலம் வங்கி கணக்குகள் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவரது எட்டு வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளனர்.

மேலும் ஜாபர் சாதிக் வீட்டில் சிசிடிவி காட்சிகளை டெல்லி போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் முக்கிய திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஜாபர் சாதிக்கின் வீட்டிற்குள் பைகள் இல்லாமலும் சென்று வெளியேறும் பொழுது பைகளுடன் சென்றுள்ளனர். அதனால் விரைவில் சிசிடிவியில் இடம் பெற்ற திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News