மனிதர்களை வளப்படுத்த கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்:WAVES நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!

By : Sushmitha
மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வெர்ஷன் சென்டரின் இன்று மே 1 நடைபெற்ற ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறையின் உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
பிறகு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் படைப்பாளிகள் முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இன்றைய நிகழ்ச்சியில் ஒரே கூரையின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளனர் இதன் மூலம் உலகளாவிய திறமைகள் ஒன்றிணைந்துள்ளன வேவெஸ் என்பது வெறும் சுருக்கெழுத்து மட்டுமல்ல கலாச்சாரம் படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய இணைப்பின் அலை இது உலகளாவிய தளமாக உள்ளது, ஒவ்வொரு கலைஞருக்குமான தளம் என்று கூறினார்
மேலும் படைப்பு பொறுப்பு பற்றி உங்களிடம் நான் பேச விரும்புகிறேன் மனித உணர் திறன் மற்றும் உணர்வுகளை கவனித்துக் கொள்வதற்கு கூடுதல் முயற்சிகள் தேவை மனிதர்களை பலப்படுத்த விரும்புகிறோம் மாறாக அவர்களை ரோபோக்களாக மாற்றக்கூடாது இது தொழில்நுட்பத்தின் வேகத்தால் ஏற்படாது கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வலுப்படுத்த வேண்டும்
நமது இளம் தலைமுறைக்கு எதிரான போக்குகளில் இருந்து நாம் காப்பாற்ற வேண்டும் இந்த பொறுப்பை படைப்பாளிகள் இருக்க வேண்டும் இந்தியாவை உங்கள் உள்ளடக்க விளையாட்டு மைதானமாக மாற்ற அனைவரையும் உலகின் அனைத்து படைப்பாளிகளையும் நான் அழைக்கிறேன் என கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி
