முர்முவின் சபரிமலை வழிபாடு! கேரளா காவல்துறை கண்காணிப்பாளரின் whatsapp ஸ்டேட்டஸ் ஆல் எழுந்த சர்ச்சை!

By : G Pradeep
இந்தியாவின் குடியரசு தலைவரான திரவுபதி முர்மு சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டு இருந்தார். அப்போது அவர் கோவிலின் வழக்கங்களை மீறி நடந்து கொண்டதாக கேரளா காவல்துறையை சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் என்பவர் தன்னுடைய whatsapp ஸ்டேட்டஸில் பதிவிட்டிருந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் தன்னுடைய ஸ்டேட்டஸில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி குடியரசு தலைவர் பின்பற்றாமல் அதை மீறி விட்டதாகவும், அதற்கு சீருடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாகவும், அதற்கு பரிகாரம் செய்யும் வகையில் பாஜக மற்றும் காங்கிரஸ் எதற்காக இன்னும் நாம ஜபம் செய்யாமல் உள்ளது என்று பதிவிட்டிருந்தார்.
அது மட்டுமல்லாமல் கேரளாவின் முதலமைச்சரோ அல்லது கேரளா அமைச்சர்களோ இதுபோன்று நடந்திருந்தால் அதனுடைய விளைவு எப்படி இருந்திருக்கும் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மனோஜ் குமார் தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜித்குமார் உத்தரவிட்ட நிலையில், மனோஜ் குமார் தவறுதலாக பதிவிட்டு விட்டதாக விளக்கம் அளித்தார்.
தான் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜை ஓபன் செய்து படித்து கொண்டிருக்கும் கை தவறி ஸ்டேட்டஸ் ஆக சென்று விட்டதாகவும் அதன் பிறகு சில நண்பர்கள் தொலைபேசி அழைப்பில் கூறியதை தொடர்ந்து அதை உடனே டெலிட் செய்து விட்டதாக கூறியுள்ளார்.
