Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உ.பி அரசின் சிறப்பான முயற்சி - பாராட்டிய உலக சுகாதார அமைப்பு(WHO)!

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உ.பி அரசின் சிறப்பான முயற்சி - பாராட்டிய உலக சுகாதார அமைப்பு(WHO)!

ShivaBy : Shiva

  |  12 May 2021 12:36 PM GMT

கொரோனா நோய்த்தொற்றை விரைவாக கண்டறிந்து அவர்களை விரைவாக தனிமைப்படுத்துதல், நோய் மேலாண்மை, அறிகுறி கொண்டவர்களை பரிசோதனை செய்தல் மூலம் நோய் பரவுதலை கட்டுப்படுத்துதல் மற்றும் தொடர்பு கண்டறிதல் மூலமாக கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக உத்திர பிரதேச அரசு செயல்படுத்தி வரும் மாநிலம் முழுவதும் வீடு வீடாக சென்று பரிசோதிக்கும் திட்டத்திற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.



மே 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் 75 மாவட்டங்களில் 97,941 கிராமங்களில் ஐந்து நாட்கள் அரசு பணியாளர்கள் நேரில் சென்று நோய்த் தொற்று குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட உ.பியில் இந்த நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கண்காணிப்பு குழுவிலும் இரண்டு பேர் கொண்ட மருத்துவ உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இவர்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று அங்கு கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களிடம் RAT(Rapid Antigen Test) கிட் மூலம் பரிசோதனையை மேற்கொண்டனர். பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் சோதனை செய்து அவர்களை வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தினர். மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் மருத்துவ பணியாளர்கள் செய்து கொடுத்தனர்.

இந்த மருத்துவ குழு 2 வாகனங்களில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று தொற்று உள்ளவர்களுக்கு சோதனைகளை நடத்தி அவர்களை தனிமைப்படுத்தி அவருக்கு தேவையான மருத்துவ உதவிப் பொருள்களை தொடர்ந்து அளித்து வந்தனர். இந்த திட்டம் அனைத்து கிராமங்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு 141,610 குழுக்களையும், 21,242 மேற்பார்வையாளர்களையும் மாநில சுகாதாரத் துறையில் இருந்து நியமித்துள்ளது.




இந்த பயிற்சி மற்றும் நுண்ணிய திட்டமிடல் ஆகியவற்றிற்கு உத்தரபிரதேச அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்த உலக சுகாதார அமைப்பு WHO இதற்கான தரத்தை உறுதி செய்வதற்காகவும் உடனடி திருத்த நடவடிக்கைகளுக்காகவும் அரசாங்கத்துடன் நிகழ்நேர கருத்துக்களை கண்காணித்து பகிர்ந்து கொள்வதற்காகவும் அலுவலர்களை நியமித்தது. தொடக்க நாளில் WHO கள அதிகாரிகள் 2,000க்கும் மேற்பட்ட அரசாங்க குழுக்களை கண்காணித்து, குறைந்தது 10,000 வீடுகளை பார்வையிட்டனர்.

இவர்கள் தொற்று இருப்பவர்களை கண்காணித்து உடனடியாக அவருக்கு மருத்துவ உதவிகளை செய்து கொடுத்தும் தொற்று பாதிப்பு அதிகம் இருப்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காகவும் சேர்த்துள்ளனர். நோய் தொற்றுக்கு பாதிக்கப்படாதவர்களை உடனடியாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறும் இந்த குழு அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் அதிக மக்கள் தொகையாக கருதப்படும் உத்தரபிரதேசத்தில் கிராமத்திற்கு தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உத்திரப்பிரதேச மாநில அரசு எடுத்துள்ளது.

நுண் திட்டமிடல், வீடுகளுக்கு நேரில் சென்று சோதனை செய்தல், தொற்று இருப்பவர்களை கண்காணித்தல், அவர்களை தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளைச் செய்தல், அனைவரும் தடுப்பூசி போட அறிவுறுத்துதல் மற்றும் அனைவருக்கும் மருத்துவ சேவை கிடைப்பதற்கான வழி வகுத்தல் போன்ற நடவடிக்கைகளில் உத்திரப்பிரதேச மாநில அரசு திறம்பட செயல்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News