வெடித்த தர்மஸ்தலா விவகாரம்!! விழித்துக் கொண்ட கர்நாடக அரசு!!

By : G Pradeep
தற்பொழுது ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் பல போலியான செய்திகள் youtube சேனல்களில் பரவி வருவது நடந்து வருகிறது. இதனால் பலர் இன்னல்களை சந்தித்து வருவதோடு மட்டுமல்லாமல் இதுபோன்று தவறான செய்திகள் பரப்பப்படுவதால் நாட்டிற்கும் சமூகத்திற்கும் கேடு விளைவிக்கிறது.
இதுபோன்று போலியான செய்திகள் பரப்புவதை தடுப்பதற்காக தற்பொழுது கர்நாடக அரசு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. செய்தி சேனல்களை தொடங்கவும், செய்திகளை யூடியூப் மூலம் ஒளிபரப்பு செய்வதற்கும் உரிமம் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும் என்று சட்டத்தை கொண்டு வர வேண்டி கர்நாடக மின்னணு ஊடக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை இதனைத் தொடர்ந்து இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கர்நாடக அரசு கூறியுள்ளார்.
இந்த கோரிக்கையின் முக்கியத்துவம் என்னவென்று பார்க்கும் பொழுது கர்நாடக மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான மஞ்சுநாதர் கோவிலில் பல பிரபலங்களும் அரசியல்வாதிகளும் வந்து செல்வார்கள். இக்கோவிலில் கடந்த 2014 ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை ஏற்பட்டதாகவும் அதில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியே இடங்களில் புதைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையிடம் புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்ந்து பல youtube சேனல்களில் பொய்யான பல தகவல்கள் பரப்பப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து கோவில் நிர்வாகி பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 8,000 த்துக்கும் மேற்பட்ட பொய்யான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி இருப்பதாகவும் அதனை உடனடியாக நீக்க வேண்டும் இல்லை என்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
இதனாலேயே youtube செய்தி சேனல்கள் அரசிடம் கண்டிப்பாக உரிமம் பெற்று செயல்பட வேண்டும் என்று கர்நாடகா மின்னணு ஊடக பத்திரிகைகள் கர்நாடக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
