Kathir News
Begin typing your search above and press return to search.

குருநானக்கும் – நம்பிக்கையும் பகுதி – 1

குருநானக்கும் – நம்பிக்கையும் பகுதி – 1

குருநானக்கும் – நம்பிக்கையும் பகுதி – 1
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Nov 2019 3:32 AM GMT


இந்தியாவில் பிறந்த குரு நானக் நம்பிக்கையையும் உறுதிப்படுத்துதலையும் முதன்மையாக கொண்ட ஒரு மார்க்கத்தை நிறுவினார். வாழ்க்கையின் மறுப்புகளையும் நிராகரிப்புகளையும் கடுமையாக எதிர்த்தார். சீக்கிய மதத்தின் இறை தத்துவமான “அகால்-புருஷ்” அதாவது “அகன்ட பிரம்மே” “ ஏக இறைவன். அத்தகைய ஏக இறைவன் எல்லோர் மனதிலும் இருக்கின்றார். இந்த இறைவனை நாம் உணர்வதே உலகத்தழைகளிலிருந்து விடுபடுவதற்கான வழி.



இது எல்லா மார்க்கங்களுமே வலியுறுத்துகிற ஒன்று. ஆனால் சீக்கிய மார்க்கம் இதிலிருந்து சற்று வித்தியாசப்படுகிறது. இறைவனை உணர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளில் மற்ற எல்லா மார்க்கங்களை விடவும் ஈது எளிமையானதாக இருக்கிறது. இந்த உலகத்தின் பரபரப்புகளுக்கு நடுவிலேயே இருந்து கொண்டு இறைவனை உணரும் வழிமுறையை போதிக்கிறது, சீக்கிய மார்க்கம்.



ஏனென்றால் குரு நானக் தோற்றுவித்த சீக்கிய மார்க்கத்தை பொறுத்தவரை உலக நடைமுறையிலிருந்து விலகுவது தன் முன்பு இருக்கும் வாழ்வை “மறுப்பதாக “அதன் மீது அவநம்பிக்கை கொள்வதாக கருதப்படுகிறது . ஏற்றுகொள்லுதல் என்பது குருநானக் வகுத்த கொள்கைகளில் முதன்மையானதாக இருக்கிறது குரு நானக் வகுத்த வழிமுறை என்பது வாழ்வை துறந்து காடுகளுக்கு சென்று துறவறம் பூண்டு வாழும் வழிமுறை அல்ல. வாழ்வை அதன் இன்ப துன்பங்களோடு நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வதே அவர் வகுத்த வழிமுறையாகும்.


குரு நானக் தோற்றுவித்த சீக்கிய மார்க்கத்தில் ஏக இறைத்துவம் ஆழமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏக இறைத்துவத்தோடு இறைவன் இல்லாத இடம் என்று எதுவுமே இல்லை ஏன்ற நிலையும் வலியுறுத்தப்படுகிறது.


குரு நானக் இன்றைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே கவிபாடும் ஆற்றல்களை பெற்ற இவர், ஆன்மீக நூல்களை எழுதியும், மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஞானியாகவும் விளங்கினார். இந்து மற்றும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு இடையேயான பிரிவினைகளை கடந்து இரண்டிற்குபொதுவான கோட்பாடுகளை முன்வைத்தார். இவர் காலத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரே அளவில் இவர் மார்க்கத்தை ஏற்று கொண்டனர்.



குரு நானக் ஒரு முறை மெக்கா சென்றபோது காபா வின் திசையில் கால்களை நீட்டி படுத்திருந்த்தாகவும் சிலர் அவரை எழுப்பி கால்களை வேறு திசையில் வைக்குமாறு சொன்ன போது உங்கள் இறைவன் இல்லாத ஒரு திசையை காண்பியுங்கள் அங்கு என் கால்களை வைத்து கொள்கிறேன் என்று சொன்னதாக வரலாற்று தகல்வல்கள் சொல்கிறது.


சீக்கிய மார்க்கத்தின் வழிமுறை மிக மிக எளிமையானது. நம் அன்றாட வாழ்வில் முழுமையாக ஈடுபட்டுக்கொண்டே “இறைவனின் நாமத்தை “இடைவிடாது உச்சரிக்க வேண்டும். இந்த பெயர் உச்சரிப்பு என்பது ஒன்றே சீக்கிய மார்க்கதை பொருத்தவரை தியானம், யோகம், தத்துவம், ஞானம் எல்லாமுமே.


சீக்கிய மார்க்கத்தின் சமூக பார்வை மிக அற்புதமான ஒன்று. எந்த வகையான ஏற்ற தாழ்வுகளையும் சீக்கிய மார்க்கம் அனுமதிப்பதில்லை. இறைவன் தானே எல்லாமாகவும் இருக்கிறான் என்பது குருநானக்கின் அசைக்க முடியா நம்பிக்கை. அதை அவர் உணர்ந்தவரும் கூட. சீக்கிய மதம் பத்து குருமார்களின் உபதேசங்களை உள்ளடக்கியது. கடைசி குருவான குரு கோபிந்த் சிங்கிற்கு பிறகு அவர்களது புனித நூலான “கிரந்த் சாகிப் “பையே குருவாக கருதுகின்றனர். சீக் என்கிற வார்த்தை சிஷ்யன் அல்லது மாணவன் என்று பொருளிலிருந்து வந்தகும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News