வள்ளலார் போதித்த 10 மதிப்புமிக்க போதனைகள்.!
வள்ளலார் போதித்த 10 மதிப்புமிக்க போதனைகள்.!

By : Kathir Webdesk
திருவருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் அக்டோபர் 5 1823 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் பிறந்தார். இவர் ஒரு ஆன்மீகவாதி. வள்ளலாருக்கு படிப்பில் ஆர்வமில்லை. ஆன்மிகத்தில் நாட்டம் இருந்தது "பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று பாடியவரும் இவரே.
வள்ளலாரின் போதனைகள் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஏனென்றால், அவர் கடவுள் என்பவர் ஒன்றே ஏழைகளின் இருப்பினும் கடவுளை காண்கிறார். அப்படிப்பட்ட வள்ளலாரின் போதனைகள் இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் தேவையானது. இனவெறி, மதவெறி என்று இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கட்டாயம் வள்ளலாரின் போதனைகளை தங்களுடைய மனதில் ஆழப் பதிய வைக்க வேண்டும்.
வள்ளலாரின் போற்றத்தக்க 10 போதனைகள்:
பசி என்று வருபவர்களுக்கு ஜாதி, மதம், இனம் என்று பார்க்காமல் அவர்களுக்கு உணவிட்டு மகிழ வேண்டும். கடவுள் என்பவர் ஒருவரே அவர்களை மதங்களால் பிரிக்கக் கூடாது. அவர் 'அருட்பெருஞ்சோதி' ஆண்டவர் எந்த உயிரையும் கொள்வதற்கு மனிதராகிய நமக்கு உரிமை இல்லை என்பதே அவருடைய வேதவாக்கு. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. அவர்களுக்கு சமாதி தான் கட்ட வேண்டும் என்பதும் அவருடைய போதனை.
ஒரு விஷயத்திலும் பொது நோக்கமாக செயல்பட வேண்டும். தன்னலம் கருதி செயல்பட கூடாது. தெய்வ வழிபாடு செய்யும் பொழுது தங்களுடைய வேண்டுதல் களுக்காக, உயிரினங்களை பலி கொடுப்பது கூடாது. அசைவ உணவுகள் அதாவது புலால் வகையான உணவுகளை உண்ண கூடாது. ஜாதி என்ற பெயரைச் சொல்லி மக்களை பிரிக்கக் கூடாது. அவர் வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு சொல்லிய அறிகுறிகளில் ஒன்று. தாய் தந்தை சொற்களை மீறி நடக்கக் கூடாது.
குருவை வணங்க தயக்கம் காட்ட கூடாது. இவ்வாறு வள்ளலாரின் போதனையை அவருடைய பிறந்த நாளான, அக்டோபர் 5 (இன்று) நாம் நம்முடைய மனதில் ஏற்றுக்கொண்டு வாழ்வில் மேலும் உயரலாம்.
