"என்ன கடவுள் முருகனை பழித்து பேசிட்டாங்களா?" 10 நாட்கள் கழித்து பதறிய தி.மு.க ஆர்.எஸ்.பாரதி.! #DMK #RSBharathi #KarupparKootam
"என்ன கடவுள் முருகனை பழித்து பேசிட்டாங்களா?" 10 நாட்கள் கழித்து பதறிய தி.மு.க ஆர்.எஸ்.பாரதி.! #DMK #RSBharathi #KarupparKootam

முருகனைப் பழித்துப் பேசியது கண்டிக்கத் தக்கது என்று கூறியுள்ள தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கறுப்பர் கூட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு என்று ட்விட்டர் மூலம் போலிக்கணக்கு உருவாக்கி மோசடி நடைபெறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க. வில் ஒரு கோடிக்கு மேற்பட்டோர் இந்துக்களாக உள்ளனர் என கூறினார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று தி.மு.க. செயல்பட்டு வருவதாகவும், கலைஞர் ஆட்சியில் இந்துக் கோவில்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டன என்றும் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டார். கலைஞர் ஆட்சியில் இருந்த போது கும்பகோணம் மகாமகம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஓடாத திருவாரூர் கோவில் தேர் ஓடுவதற்கு காரணமாக இருந்தவர் கலைஞர். புட்டபர்த்தி சாய்பாபா கலைஞரை வீடு தேடிச் சென்று சந்தித்த வரலாறு உண்டு என்பன உள்ளிட்ட விவரங்களை அவர் சுட்டிக்காட்டினார்.