Kathir News
Begin typing your search above and press return to search.

ரயில் விபத்துகளால் உயிரிழப்போருக்கான இழப்பீடு தொகை 10 மடங்கு அதிகரிப்பு - ரயில்வே வாரியம் அறிவிப்பு!

ரெயில் விபத்துகளில் உயிரிழப்போருக்கான இழப்பீடு தொகை 10 மடங்காக அதிகரித்து இருப்பபதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

ரயில் விபத்துகளால் உயிரிழப்போருக்கான இழப்பீடு தொகை  10 மடங்கு அதிகரிப்பு - ரயில்வே வாரியம் அறிவிப்பு!

KarthigaBy : Karthiga

  |  23 Sep 2023 4:00 AM GMT

ரயில் விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு தற்போது ரயில்வே ரூபாய் 50,000 இழப்பீடு வழங்குகிறது. இதே போல பலத்த காயமடைவோருக்கு ரூபாய் 25,000 லேசான காயமடைவோருக்கு ரூபாய் ஐந்தாயிரமும் நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகையை தற்போது 10 மடங்கு அதிகரிக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.


அந்த வகையில் ரயில் விபத்து மரணங்களுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்தவருக்குற் ரூபாய் ப 2.50 லட்சமும் லேசான காயமடைந்தவருக்கு ஐம்பதாயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதே போல ரயில்களில் நடைபெறும் பயங்கரவாதம் கொள்ளை சம்பவங்கள் வன்முறை நிகழ்வுகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைவோருக்கு ரூபாய் 50,000 லேசான காயமடைவோருக்கு ரூபாய் ஐந்தாயிரமும் வழங்கப்படும். முன்னதாக இது முறையே ரூபாய் 50,000, ரூபாய் 25,000 , ரூபாய் ஐந்தாயிரம் ஆக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News