10 புதிய வந்தே பாரத் ரயில்கள் மற்றும் குஜராத்தில் 400 கோடி மதிப்புள்ள எக்டா மால்களுக்கு அடிக்கல்- பிரதமர் மோடி தலைமையில் தொடக்கம்!
பிரதமர் மோடி 10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் குஜராத்தில் 400 கோடி மதிப்புள்ள எக்டா மால்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
By : Karthiga
குஜராத்மாநிலம் அகம தாபாத்தில்நடந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இன்று 10புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில்சென்னை-மைசூரு வந்தே பாரத் ரயில் சேவையும் அடங்கும். மேலும் பல்வேறு ரயில்வே சேவைகள் மற்றும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
ரயில்வே உள்கட்டமைப்பு தொடர்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் துறையை ஊக்கப்படுத்தும் வகையில்,அகமதா பாத்தில் உள்ள டிஎஃப்சி.யின் கட்டுப்பாட்டு மையத்தில் நடந்தவிழாவில் பிரதமர் மோடி, ரூ.1,06,000் கோ டி மதிப்பிலான ரயில்வே மற்றும் பெட்ரோ கெமிக்கல் திட்டங்களுக்கு அடிக்கல் நாடடியும், தொடங்கி வைத்தார். ரயில்வே பணிமமனை கள்,லோகோஷெட்கள், பிட்லைன் மற்றும் கோச்சிங் டிப்போக்கள், பல்தான் பாராமதி இடையேயான புதிய பாதை, எலக்ட்ரிக் தொடர்பு சிஸ்டத்தை புதுப்பிக்க பணிகள் போன்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அகமதாபாத், மும்பை சென்ட்ரல், செகந்திராபாத், விசாகப்பட்டினம், மைசூர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரஸ், பாட்னா, லக்னோ ,நியூ ஜல்பை குரி பாட்னா, பூரி விசாகப்பட்டினம், லக்னோ டேராடூன், கலாபுரஹிஸ்ரீ என் விஸ்வேஸ்வரய்யா முனையம் பெங்களூரு ,ராஞ்சி, வாரணாசி, கஜுராஹோ டெல்லி ஆகிய 10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியைசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பிரதமர் மோடி ரயில்வே நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள 50 பிரதான் மந்திரி ஜன் அவுசாதி மருந்தகங்களை நாட்டுக்கு அற்பணித்தார்.
இந்த மருந்தகங்கள் மக்களுக்கு குறைவான விலையில் தரமான மருந்துகளை வழங்குகின்றன உள்ளூர் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் 1500 'ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள்' என்ற கடைகளையும் நாட்டுக்கு அர்பணித்தார். நாட்டில் 975 பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தியில் இயங்கும் நிலையங்கள் கட்டிடங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த முன் மாதிரியான முயற்சி நாட்டின் மாற்று எரிசக்தி பயன்பாட்டு முயற்சிக்கு பங்களிப்பதுடன் ரயில்வே துறையில் கார்பன் பயன்பாட்டை குறைக்கும். மேலும் குஜராத்தில் 400 கோடி மதிப்புள்ள எக்டா மால்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
SOURCE :Dinathamizh