100 நாள் வேலை திட்டங்கள்: கடந்த நிதியாண்டில் ரூ.7500 கோடி நிதி ஒதுக்கீடு!

By : Bharathi Latha
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு சென்ற நிதியாண்டில் ரூ.7500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் கமலேஷ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் திரு ஆர் தர்மர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், தேசிய சமூக உதவித் திட்டத்திற்கு ரூ.60,635 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தீன்தயாள் உபாத்யாயா கிராம மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2790 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்திற்கு சென்ற நிதியாண்டில் ரூ.310 கோடியும், பிரதமரின் ஊரக சாலைகள் திட்டத்திற்கு ரூ.741 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் அவர் தெரிவித்தார்.
தீன்தயாள் அந்த்யோதயா-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு மத்திய அரசின் ஒதுக்கீடு ரூ.466.39 கோடி என்றும் இதில் விடுவிக்கப்பட்ட தொகை ரூ.349.80 கோடி என்றும் அவர் கூறினார். பிரதமரின் விவசாய பாசன திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ.95.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக திரு கமலேஷ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
