Kathir News
Begin typing your search above and press return to search.

16 வயதில் 100 கோடி மதிப்பிலான நிறுவனம் - இந்திய சிறுமி சாதனை!

16 வயது சிறுமி பிரஞ்சலி அவஸ்தி `Delv.AI’ என்ற நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்.

16 வயதில் 100 கோடி மதிப்பிலான நிறுவனம் - இந்திய சிறுமி சாதனை!

KarthigaBy : Karthiga

  |  11 Oct 2023 4:30 PM GMT

சிறு வயதிலேயே டெக் உலகில் கவனம் பெற்றதற்கு காரணம் தன்னுடைய தந்தை என சிறுமி தெரிவித்து இருக்கிறார்.இவரின் தந்தைக்குப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பது பேஷனாக இருந்துள்ளது. இந்த ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட சிறுமி ஏழு வயதிலேயே கோடிங் பயின்றுள்ளார்.

11 வயதில் குடும்பத்தினர் இடம்பெயர்ந்து ஃபுளோரிடாவிற்கு சென்ற பின்னர் கம்ப்யூட்டர் சயின்ஸ், கணித போட்டி வகுப்புகளுக்குச் சென்றுள்ளார். 13 வயதில் ஃபுளோரிடா இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டி ஆராய்ச்சி ஆய்வகத்தில் இன்டர்ன்ஷிப்பிற்கு தேர்வாகியுள்ளார். அப்போது தான் இவருக்குத் தொழில்முனைவோராவதற்கான கதவுகள் திறந்திருக்கின்றன.

தொற்றுநோயின் பாதிப்பு காரணமாக மெஷின் லேர்னிங் (Machine learning) உயர்நிலைப் பள்ளிக் கல்வியை ஆன்லைன் முறையிலேயே முடித்தார்.மியாமி டெக் வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ஐடியாவை வெளிப்படுத்திய பின் 4,50,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 3.7 கோடி ரூபாய்) நிதியுதவியாக கிடைத்துள்ளது.


அதன்பின்னர் Delv.AI நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தில் 10 டெக் நிபுணர்கள் கொண்ட குழுவினர் வேலை செய்கின்றனர். 2022-ல் 3.7 கோடி ரூபாய் நிதியில் இருந்து தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாய்.


SOURCE :Vikatan.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News