“100 நாள் ஆட்சி வெறும் டிரைலர்தான், முழுப்படத்தை இனிமேல்தான் பார்க்கப்போகிறீர்கள்” - பிரதமர் நரேந்திர மோடி 'பஞ்ச்'!!
“100 நாள் ஆட்சி வெறும் டிரைலர்தான், முழுப்படத்தை இனிமேல்தான் பார்க்கப்போகிறீர்கள்” - பிரதமர் நரேந்திர மோடி 'பஞ்ச்'!!
By : Kathir Webdesk
பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நாட்டின் இரண்டாவது பெரிய மல்டி-மாடல் நீர்வழி முனையத்தை சாஹிப்கஞ்சில் நாட்டிற்காக அர்ப்பணித்தார்.
புதிதாக கட்டப்பட்ட மாநில சட்டமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். புதிய மாநில தலைமை செயலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், விவசாயிகள் ஓய்வூதிய திட்டம், ஏக்லவ்யா மாதிரி குடியிருப்பு பள்ளி திட்டம் ஆகியவற்றையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, கூறியதாவது:-
ஏழை மக்களின் பணத்தை சூறையாடியவர்களை, சரியான இடத்திற்கு அனுப்புவதே எங்கள் ஆட்சியின் நிலைபாடு. சிலர் ஏற்கனவே அங்கு சென்று விட்டனர். நாட்டைவிட மேலானவர்கள் என்று நினைத்தவர்கள், தற்போது நீதிமன்றங்களைச் சுற்றி வருகிறார்கள்.
இப்போது, நாடு ஒருபோதும் காணாத வேகத்துடன் முன்னேறி வருகிறது.
100 நாள் ஆட்சி, வெறும் டிரைலர்தான். இனிமேல்தான் முழுபடத்தை பார்க்கப் போகிறீர்கள்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.